தெரிந்துகொள்ளுங்கள்... Print E-mail
Written by Dr. Somash   

தெரிந்துகொள்ளுங்கள்...
அப்பா அம்மாவுக்கு அந்திமக்கிரியை செய்த முக்கியகர்த்தா (ஜீவந்தர்களில்-மூத்தவரான மகன்) ஆண்டுத்திதி முடிவதற்கு முன்னதாக தான் திருமணம் செய்யவேண்டிய இக்கட்டானநிலை ஏற்ப்பட்டால் மீதமாக இருக்கிற மாத மாசிகங்க்களை சங்கிரகித்து ஒன்றாகா செய்துமுடித்துவிட்டு சுபகாரியத்தைசெய்யலாம் என்பதற்கு ஆபஸ்தம்ப அபாரப்பிரயோகம் என்னும் புஸ்தகத்தில் தமிழில் விளக்கம்மாக உள்ள ஆதாரம் இதோ..கல்யாணம் உபநயனம் போனவாவற்றை செய்த பின்னர் மீண்டும் மாதாமாதம் மாசிகங்களை செய்தல்வேண்டும். இதுமாதிரி ஆண்டுததிதி (ஆப்திகம்) வருவதற்குள் அவசியமாயின் மூன்று தடவைகள் மீதியாகவுள்ள மாசிகங்களை சங்கிரகித்து செய்துவிட்டு சுபகாரியங்களி நடாத்தலாம். இது முக்கிய கர்த்தாவுக்கு மாத்திரம் கூறப்பட்டுள்ள விதியாகும். மூத்தவருடன் இணைந்து கிரியைகளில் பங்குகொண்ட ஏனைய சகோதரர்கள் தாராளமாக் ஒரு வருடம் பூர்த்தியாகு முன்னரே தங்களுக்கோ தமது புத்திரர்களுக்கோ சுப மங்கள நிகழ்வுகளை தாமே முன்னின்று நடாத்தலாம். தமது தந்தை தாயார் தவிர சகோதரர் அல்லது ஏனைய உறவினருக்கு கர்த்தாவாகவிருந்து கடமை செய்தவர்கள் சுபகாரியங்களுக்காக மீதி மாசிகங்க்களை ஒருதடவை தொகுத்து செய்து ஆப்திகத்தை முடிந்தவுடன் சுபகாரியங்களை மேற்கொண்டால் திரும்ப மாசிகங்களை தொடர்ந்து செய்யவேண்டியதில்லை என்பது தெளிவாகின்றது. ஆறுதலாக வாசியுங்கள்..