எந்த கடவுளை வழிபடுகிறோமோ...... Print E-mail
Written by Dr. Somash   
Moderninternational Hinduculture

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

எந்த கடவுளை வழிபடுகிறோமோ அந்த தெய்வம் எல்லா தெய்வத்தையும்விட உயர்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அதில் ஈடுபாடு இருக்கும். மனம் முழுதும் கடவுள் நினைவு பரவும்போது, அதில் இருக்கும் மற்ற விஷயங்கள் மறைந்துவிடும். 'மற்ற விஷயங்களை முழுமையாகத் தவிர்த்து,

என்னை மட்டும் நினைவில் இருத்தி அசை போட்டால், யோகக்ஷேமத்தை ஏற்று நிறைவு

செய்வேன்’ என்கிறார் கடவுள் (அனன்யா: சிந்தயந்தோ மாம்யேஜனா:). 'த்யானம்’ என்று சொல்லுக்கு, 'மனதில் இருத்தி நினைத்தல்’ என்று பொருள். கடவுள் வடிவத்தை மனதில் பதிய வைத்து, அவரது நாமாவை மனம் அசை போடும்போது, அவருக்கான பணிவிடை மனதில் நிகழ்ந்துவிடும். அவர் இருப்பது மனம். அந்த மனம் அவரது பெயரை அசை போடும். இருக்கும் இடமும், அசைபோடும் இடமும் ஒன்றானதால், அசைபோடும் ஓசையானது அவருக்கு மட்டும் எட்டிவிடும். அத்தனை அலுவல்களில் இருந்தும் விடுபட்ட மனமானது அவரை நினைக்கிறது, அவரது நாமாவை அசைபோடுகிறது. இது ஒரு தவமாகும். இந்த தவம், நாம் செய்த தவறுகளை மறையச் செய்து, நம்மை தூய்மை பெற்றவராக மாற்றிவிடும். தூய்மையானவர் மனதில் குடிகொண்டிருக்கிறார். அவரது தூய்மையான பெயரை மனம் அசைபோடும்போது மனதில் படிந்த மாசு அகன்றுவிடும்.
நன்றி - சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.::  தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா