ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் Print E-mail
Thursday, 25 December 2014 19:13

நண்பர்களே, சோதிட வல்லுநர் ஒருவர் என்ன கூறுகிறார் என்று பார்போம்!

சொந்த வீடு குடிபோகும் போது என்றில்லாமல், நாம் வாழும் வீட்டில் ஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வது பல நன்மைகளைப் பயக்கும்.

ஒரு வீட்டில் ஹோமம் செய்வதால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை காப்பதோடு மட்டும் அல்லாமல், சுற்றுச் சூழலுக்கும் கூட பேருதவி செய்கிறது.

ஹோமப் புகையும் ஹோமத்தின் போது கூறப்படும் மந்திரங்களும் ஒரு வீட்டை மட்டுமல்ல ஊரையே காப்பாற்றும். இதுபோல எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
-நன்றி. சோதிட மலர்.

 
கதவு தட்டினால்தான் திறக்கும் Print E-mail
Thursday, 25 December 2014 19:14

கதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை முறைகளில் ஹோமங்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அதில், எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படும் கணபதி ஹோமம், நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேற சுதர்ஸன ஹோமம், நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்க செய்யப்படும் நவக்கிரக ஹோமம்... இப்படி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பொங்க பல ஹோமங்கள் பற்றி விளக்கியுள்ளார். மேலும், லட்சுமி குபேர ஹோமம், சரஸ்வதி ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், தன்வந்திரி ஹோமம், தில ஹோமம், ஆவஹந்தி ஹோமம், மகா மிருத்யுஞ்ஜய ஹோமம், வாஸ்து ஹோமம், புருஷ ஸுக்த ஹோமம், ஸ்ரீஸுக்த ஹோமம், பகவத்கீதா ஹோமம், சுயம்வரா பார்வதி பரமேஸ்வர ஹோமம், சந்தான கோபாலகிருஷ்ண ஹோமம், ஐக்கிய மத்ய ஹோமம், வித்யாவிஜய ஹோமம், ரிண மோசன ஹோமம் முதலான ஹோமங்களைச் செய்தால் சிறப்புடன் வாழலாம

-நன்றி.''அர்த்தமுள்ள ஹோமங்கள்'' சுப்ரமணிய சாஸ்திரிகள்.

 
உலக நாடுகளில் விநாயகர் வழிபாடு! Print E-mail
Thursday, 25 December 2014 19:15

நண்பர்களே, விநாயக வழிபாடு நம் நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா உட்பட பல உலக நாடுகளிலும் உண்டு என்று அறிந்து கொண்டிருப்பீர்கள்.
பர்மாவில் “மகாபிணி” என்றும், மங்கோலியாவில் “தோட்கர்” என்றும், திபெத்தில் “சோக்ப்ராக்” என்றும், கம்போடியாவில் “பிரசகணேஷ்” என்றும், சீனாவில் “க்வான்ஷிடியாக்” என்றும், ஜப்பானில் “விநாயக் ஷா” என்றும் வணங்கப் படுகிறார்.
இந்தோனேஷியாவில் சதுர்முக கணபதி என்றும், ஜப்பானிலும், சீனாவிலும் அர்த்தநாரி (பாதி பெண், பாதி ஆண்) உருவத்திலும் விநாயக வழிபாடு நடைபெறுகிறது.

 
பதினாறு பெயர்களைத்.......................... Print E-mail
Thursday, 25 December 2014 19:14

அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:

ஸுமுகன்- மங்கள முகமுடையவர்.
ஏக தந்தன்- ஒற்றைத் தந்தம் கொண்டவர். (மற்றொன்றை ஒடித்துதான் மகாபாரதம் எழுதினார்.)
கபிலன்- மேக- சாம்பல் வண்ணர்.
கஜகர்ணகன்- யானைக் காதுகள் கொண்டவர்.
லம்போதரன்- பருத்த வயிறு கொண்டவர்.
விகடன்- குள்ளமாக இருப்பவர்.
விக்னராஜன்- இடையூறுகளுக்கு அதிபர்.
விநாயகன்- எல்லாருக்கும் நாயகர்; முதன்மையானவர்.
தூமகேது- அக்னியைப்போல பிரகாசிப்பவர்.
கணாத்யக்ஷன்- பூதங்களுக்குத் தலைவர்.
பாலசந்திரன்- சந்திரனை தரித்தவர்.
கஜானணன்- யானைமுகம் கொண்டவர்.
வக்ரதுண்டன்- வளைந்த துதிக்கை கொண்டவர்.
கும்பகர்ணன்- முறம்போன்ற காதுகள் கொண்டவர்.
ஹேரம்பன்- பக்தர்களுக்கு அருள்புரிபவர்.
ஸ்கந்தபூர்வஜன்- கந்தனுக்கு முன்னவர்.

இந்தப் பதினாறு பெயர்களைத் துதித்துத் தொடங்கினால் எக்காரியமும் வெற்றிபெறும்; எல்லா தடைகளும் விலகும்.

 
கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது? Print E-mail
Thursday, 25 December 2014 19:16

நண்பர்களே,, விநாயகப்பெருமானை சற்று உற்று நோக்கிப்பாருகள். என்ன உணர்த்துகிறது?

கணபதியின் வடிவம் கூறும் பொருள் யாது?
சிறிய கண்கள்- கூர்ந்து கவனி.
பெரிய காதுகள்- நற்கருத்துகளை அகன்று, ஆழ்ந்து கேள்.
நீண்ட துதிக்கை- பரந்த மனப்பான்மையோடு தேடு.
சிறிய வாய்- பேசுவதைக் குறை.
பெரிய தலை- பரந்த அறிவு, ஞானம் தேடு.

பெரிய வயிறு- செயல்களில் சிக்கல்கள், தடைகள், தோல்விகள் வரலாம். அனைத் தையும் ஜீரணித்து முன்னேறு.

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 2 of 28