ஆடி மாத சிறப்புகள்; Print E-mail
Sunday, 23 July 2017 13:54

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

ஆடி மாத சிறப்புகள்;

கடக ராசியில் சூரியன் பிரவேசம் செய்வது ஆடி மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் இதை ‘கர்கடக மாதம்' என்பார்கள். ஆடி மாதத்தில் தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறது. அதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனது பயணத்தை துவக்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும், இரவு நேரம் நீண்டும் காணப்படும்.

அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். ஆடி மாதத்தில் ஆலயங்களில் பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது.

 

இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஆடி மாதம் வந்தாலே வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி. அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.

 

prepared by panchadcharan swaminathasarma

 
ஆடி மாத சிறப்புகள். Print E-mail
Sunday, 23 July 2017 13:51

தெரிந்து கொள்வோம் நண்பர்களே :-

எமக்கு ஆடிப் பிறப்பு என்ன செய்தியைத் தருகிறது?

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்! தையில் அறுவடை செய்யவேண்டும் என்றால், ஆடியில் விதைக்க வேண்டும். பொதுவாகவே ஆடி என்பது மழைக்காலத்தின் துவக்கம். நல்ல விளைச்சலை எதிர்பார்க்கும் விவசாயிகள் இந்தப் பருவத்தில் விதை விதைப்பார்கள். இந்த விதைதான் தையில் அறுவடைக்குத் தயாராகிறது. எனவே, நற்பலனை எதிர்பார்க்கும் எவரும் நற்காரியங்களில் ஈடுபட உகந்த மாதமாக ஆடி விளங்குகிறது.

ஆடி மாதம் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்பார்கள். அதன் உள்ளர்த்தத்தை நாம் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.

உலகியல் வாழ்க்கைக்காக உழைக்கும் மக்கள், தம் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகோலும் ஆன்மீக வாழ்க்கைக்கு ஒதுக்கும் நேரம் எப்போதும் குறைவாகவே இருக்கிறது. ஆடி மாதத்தில், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆடிவேல், ஆடி அமாவாசை என்று, ஆன்மீகப் பயணத்துக்கு உகந்த பல திருநாட்கள் இருக்கின்றன.

பணத்தின் பின்னாலேயே ஓடும் நம்மை சற்று இழுத்துப் பிடித்து நிறுத்தி, கொஞ்சம் ஆன்மீக வாசனையையும் ஊட்டுவதற்காகவே ஆடியில் எந்தவொன்றையும் ஆரம்பிப்பதில்லை.

ஆனால், இந்த ஒரு மாதமும் நாம் ஆன்மீகத்தின் பால் காட்டும் நாட்டம், தொடரும் நமது தேடல் பயணத்துக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, அறம், பொருள், இன்பம், வீடு பேற்றைத் தேடும் நம் அனைவரது பயணத்துக்கும் ஆடிப் பிறப்பு நல்லதொரு ஆரம்பம் தரும்!

Information collected by panchadcharan swaminathasarma.

 
தீர்த்தம் பருகுவது எப்படி? Print E-mail
Sunday, 23 July 2017 11:49

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

ஆலயங்களில் தீர்த்தம் தருகிறார்கள். அது ஒரு புண்ணிய நீர், அதை நிலத்தில் சிந்தாமல் பருக வேண்டும் கவனமாக.
கையை விரித்தபடி தீர்த்தம் வாங்கும் போது அரைவாசிக்கு மேலே கீழே கொட்டிவிடும்.

தீர்த்தம் வாங்கிக் கொள்ளும் முறையும் ஒன்று உள்ளது! கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்தால், உள்ளங்கை குவிந்து விடும். அதில் நீரைச் சிந்தாமல் வாங்கிக் கொள்ளலாம்! சிலர் வேட்டியின் நுனியையோ, துண்டின் நுனியையோ ஒரு கையில் பிடித்து இன்னொரு கையில் வாங்கிக் கொள்வார்கள்; கீழே சிந்தாது!

நல்ல விடயங்களை அறிந்து அதன் படி ஒழுகுவோம். நிச்சயம் இறைவன் அருள் பாலிப்பான்.

தகவல் சேகரித்தவர்:panchadcharan swaminathasarma.

 
தீர்த்தம்:- Print E-mail
Sunday, 23 July 2017 11:36

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

இந்த சுப்ரபாதத்தை படியுங்கள்.; தீர்த்தம் என்றால் என்ன, ?அதில் கலந்துள்ள பொருட்கள் என்ன? என்று சொல்லப்படுகிறது ! பாருங்கள்.

'''ஏலா லவங்க கனசார சுகந்தி தீர்த்தம்
திவ்யம் வியத்சரிதி ஹேம கடேஷூ பூர்ணம்
த்ருத் வாத்ய வைதிக சிகாமணய ப்ருஹ்ருஷ்டா
திஷ்டந்தி வேங்கட பதே தவ சுப்ரபாதம்'''

ஏலா லவங்க கனசார = ஏலக்காய், லவங்கம், பச்சைக் கர்ப்பூரம்
சுகந்தி தீர்த்தம் = இவற்றால் நறுமணம் கமழும் நன்னீர் (தீர்த்தம்)
தீர்த்தங்களில் பெரும்பாலும் இடப்படும் பொருட்கள்:
பச்சைக் கர்ப்பூரம்

ஏலக்காய், இலவங்கம்
ஜாதிக்காய், வெட்டிவேர்
மருத்துவ மரப்பட்டைகள்
சிறிது மஞ்சள்
எல்லாவற்றுக்கும் மேலாக, துளசி! - இவற்றினால் உண்டாகும் வாசம், நாத்திகரையும் தீர்த்தம் பருக வைக்கும்! :-)
த்ருத் வாத்ய = வேகமாக எடுத்து வருகிறார்கள்
வைதிக சிகாமணய = வேத ஓதும் விற்பன்னர்கள்!
ப்ருஹ்ருஷ்டா = மகிழ்ச்சியுடன் (வந்து உன் சன்னிதியில் நிற்கும் அவர்களுக்கு)
திஷ்டந்தி = காத்திருந்து அருள் புரிவாய்!
வேங்கட பதே = திருவேங்கடமுடையானே
தவ சுப்ரபாதம் = உனக்கும், அதனால் எமக்கும் இனிய காலைப் பொழுதாகட்டும்!!

இப்படியாக தீர்த்தம் பருக காத்திருக்கும் அடியார்களுக்கு எம்பெருமானே நீங்கள் அனைத்து அனுகிரங்களையும் தர வேண்டுகிறோம்.

Information prepared by  panchadcharan swaminathasarma.

 
சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால்............... Print E-mail
Wednesday, 06 July 2016 11:11

நண்பர்களே தெரிந்து கொள்வோம்:

சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு. போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோலதான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும்போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 10 of 43