இறைவனை ஆராதிப்பதை......... Print E-mail
Sunday, 11 October 2015 12:12

நண்பர்களே, அறிந்து கொள்வோம்.

இறைவனை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. 
பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால் , ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி அட்சதையை போட்டு வழிபட்டால் அதற்கும் பயன் உண்டு .
-ஆன்மிக மலர் ஒன்றில் இருந்து. தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 
முனிவர் மரத்தடியில் ........... Print E-mail
Sunday, 11 October 2015 12:14

நண்பர்களே தர்மத்தை கடைப்பிடியுங்கள்:

முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.
அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.

இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.
அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது….?
அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.
தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.
-வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள்.(தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா)

 
சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன? Print E-mail
Sunday, 11 October 2015 13:33

நண்பர்களே, சரவண பவ என்கிறோம். சரவண பொய்கை என்கிறோம். கருத்துகளை அறிவோம்.

சரவணபவ மந்திரத்தின் பொருள் என்ன?

"சரவணம்' என்றால் தர்ப்பை. "பவ' என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் "சரவணபவ' என பெயர் வந்தது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பறந்த தீப்பொறிகள், தர்ப்பைக் காட்டில் இருந்த பொய்கையை அடைந்தன. அதுதான் சரவணப் பொய்கை. அந்தப் பொறிகள் ஆறு குழந்தைகள் ஆயின. பார்வதிதேவி. அவர்களை ஒரே குழந்தையாக்கினாள். ஆறு முகம், பன்னிரண்டு கையுடன் முருகன் தோன்றினார் என்கிறது கந்தபுராணம்.

 
நல்லதே நினைத்தால்........ Print E-mail
Sunday, 11 October 2015 13:31

நண்பர்களே அறிந்து கொள்வோம்.

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும்.
மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும்.

என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும்.
மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.:தொகுப்பு -பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன...... Print E-mail
Sunday, 11 October 2015 13:35

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்:

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 29