விநாயக சதுர்த்தி நடைபெறும் இந்நாளில் ......... Print E-mail
Sunday, 11 October 2015 12:08

நண்பர்களே, விநாயக சதுர்த்தி நடைபெறும் இந்நாளில் விநாயகப்பெருமானின் அவதாரங்களை தெரிந்து கொள்வோம்.

பிள்ளையார் அவதாரங்கள் !

பிள்ளையாரின் அவதாரங்கள் குறித்து பார்க்கவ புராணம் விரிவாக விளக்குகிறது. அனுக்கிரகம் நிறைந்த ஆனைமுகனின் அந்த அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும் இங்கே உங்களுக்காக...

வக்ரதுண்டர்: காசியை துராசுரன் என்ற கொடுங்கோல் மன்னன் ஆண்டுவந்தான். அவனை அழிக்க சக்திதேவியை நோக்கி தேவர்கள் தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய சக்தி, வக்ரதுண்ட விநாயகரைத் தோற்றுவித்தாள். சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய வக்ரதுண்டர் துராசுரனை அழித்து அருள்புரிந்தார்.

சிந்தாமணி கணபதி: அபிஜித் என்ற அசுரனுக் கும் குணவதிக்கும் இறையருளால் பிறந்த கணன் என்பவன், கபிலரை துன்புறுத்தி அவரிடம் இருந்த சிந்தாமணியைக் கவர்ந்தான். இதனால் வருந்திய கபிலர் விநாயகரை மனமுருகி வழிபட்டார். அவருக்கு அருள்புரிய திருவுளம் கொண்ட பிள்ளையார், கணனை அழித்து சிந்தாமணியை மீட்டுக் கொடுத்தார்.

கஜானனர்: பார்வதி பரமேஸ்வரரிடம் அவதாரம் செய்து கஜமுகாசுரனைக் கொன்ற விநாயகரை கஜானனர் எனப் புராணங்கள் போற்றிப் புகழ்கின்றன.

விக்ன விநாயகர்: வரேண்யன் புஷ்பவதி என்ற தம்பதியரிடம் தோன்றி விக்னங்களை அகற்றியவர் விக்ன விநாயகர். இவர், வரேண்யன் என்பவனுக்கு உபதேசித்ததே கணபதி கீதை ஆயிற்று.
மயூரேச கணபதி: சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைப்பிடித்து வழிபட்ட பார்வதிதேவியிடம் அவதரித்து, மயில் வடிவினனான ஸிந்து என்ற அசுரனை அழித்து, அவனையே வாகனமாகக் கொண்டவர் இந்த விநாயகர்.

பாலசந்திரர்: தேவர்களை அடக்கியாண்ட அநலன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கி னார். அதனால் உண்டான வெம்மை நீங்க, மிக குளிர்ச்சியான சந்திரனை நெற்றியில் அணிந்து பாலசந்திரர் என்று பெயர் பெற்றார்.

தூமகேது: புகை வடிவான அசுரன் ஒருவனை அழிப்பதற்காக அவதரித்தவர் தூமகேது விநாயகர். மாதவன், ஸுமுதா என்ற அரச தம்பதியருக்குப் பிள்ளையாகத் தோன்றி, தூம கேதுவை வதைத்தார் இந்த பிள்ளையார்.

கணேசர்: பலி என்னும் அரக்கனைக் கொல்ல கணங்களுக்குத் தலைவனாக வந்து வெற்றி கண்டதால் கணேசர் என்ற திருப்பெயர் பெற்றார் பிள்ளையார்.

கணபதி: பார்வதி பரமேஸ்வரர் யானையின் சித்திரத்தைப் பார்த்துக் களிக்கும்போது அவதரிஅவதரித்தவர் கணபதி.

மகோற்கடர்: காச்யப முனிவரின் பிரார்த்தனையால், அதிதியிடம் பிறந்தவர் மகோற்கடர். தேவாத்த நாராத்ரர்கள் இவரால் சம்ஹாரம் செய்யப்பட்டனர்.

துண்டி கணபதி: துராஸதன் என்ற அரக்கனை அழிக்க, உமையவளின் திருவருளால் அவதரித்தவர் துண்டி கணபதி.
-ஆன்மிக சஞ்சிகை ஒன்றில் இருந்து,

 
''சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து" Print E-mail
Sunday, 11 October 2015 12:10

அறிந்து கொள்வோம் நண்பர்களே!

''சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து"

மோட்ஷத்தை அடைய வேண்டுமானால் தர்மம் (புண்ணியம்) செய் என கண்ணன் அர்ச்சுனனுக்கு சொல்கிறான். அப்போது அர்ச்சுனன் "தர்மம் செய்தால் அதன் பலம் எனக்கு கிட்டிவிடுமே, அப்புறம் நான் மோட்சத்துக்கு போவது எப்படி?" என்று கேட்டான். அப்படியானால் தர்மம் செய்யாதே என கண்ணன் சொன்னான். தர்மம் செய்யாமலிருந்தால் மோட்ஷம் போக முடியாதே என்றான் அர்ச்சுனன்.

சிலர் நினைக்கக் கூடும் 'இதென்ன கண்ணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறானே, தர்மம் செய் என்கிறான், பின் செய்யாதே என்கிறான்'....கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான். மோட்ஷத்தை கொடுப்பவன் நானே. மோட்சத்துக்கு உன்னை அனுப்ப வேண்டுமானால், எனக்குப் பிடித்ததை நீ செய்யவேண்டும். ஆனால் அதை உன்பொருட்டு செய்யக்கூடாது. அதாவது தர்மத்தை செய், ஆனால் 'நான் செய்கிறேன்' என்ற நினைப்பில்லாமல் செய். தர்மத்தை செய் ஆனால் அதன் பலத்தை என்னிடம் விட்டுவிடு.

இதுவே "சர்வம் கிருஷ்ணார்ப்பணம் அஸ்து"

தகவல்-வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள்.: தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
முனிவர் மரத்தடியில் ........... Print E-mail
Sunday, 11 October 2015 12:14

நண்பர்களே தர்மத்தை கடைப்பிடியுங்கள்:

முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.
அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.

இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.
அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது….?
அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.
தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.
-வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள்.(தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா)

 
இறைவனை ஆராதிப்பதை......... Print E-mail
Sunday, 11 October 2015 12:12

நண்பர்களே, அறிந்து கொள்வோம்.

இறைவனை ஆராதிப்பதை, ஒரு கடமையாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. இறைவனை வழிபடாத நாளெல்லாம் வீணான நாள் என்பர். அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜை செய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு. 
பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால் , ‘அட்சதாம் சமர்ப்பயாமி’ என்று சொல்லி அட்சதையை போட்டு வழிபட்டால் அதற்கும் பயன் உண்டு .
-ஆன்மிக மலர் ஒன்றில் இருந்து. தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 
நல்லதே நினைத்தால்........ Print E-mail
Sunday, 11 October 2015 13:31

நண்பர்களே அறிந்து கொள்வோம்.

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும்.
மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும்.

என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும்.
மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.:தொகுப்பு -பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 29