Kusa grass (Tharbai) Print E-mail
Friday, 15 November 2013 20:21

 
Santhiyavandhanam By Drsomash Print E-mail
Thursday, 14 November 2013 20:06

 
திருநீறு எனும் விபூதி மகிமை- திரி புண்டரம் விளக்கம். Print E-mail
Sunday, 13 January 2013 09:24

திருநீறு எனும் விபூதி மகிமை- திரி புண்டரம் விளக்கம்.

மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."

திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம். விபூதி அணிய வெட்கம்  வேண்டாம்.

சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.

முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு: உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு: : மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும் நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.



*

 
திருமணத்தின் போது செய்யப்படும் சடங்கு முறைகளும் அவற்றின் சிறப்பும்! Print E-mail
Saturday, 02 November 2013 23:51

  

திருமணத்தின்போது செய்யப்படும் சடங்குகளின் சிறப்புக்கள்.

  திருமனங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்று சொல்வார்கள். பல்வேறு வகைப்பட்ட சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டாலும் அவற்றிற்கு வலுவான காரணங்கள் கண்டு. இதோ ஒருசில...காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும். மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல். ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்: இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும். மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது. கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில் விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம் செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.

 

 
உருத்திராட்சம் அணிவது ஏன்? Print E-mail
Sunday, 13 January 2013 11:55

உருத்திராட்சம் அணிவது ஏன்?

உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தரிக்க  வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.

இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். 'ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன். எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகி உருத்திராட்சங்களாயின' என்றார்.

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

உருத்திராட்சத்தை தரித்தால்  லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.

இரே அளவுள்ளதும், உறுதியானதும்,  சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.

இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.

இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரீஸ்வரர்  உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.

அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் அருள்  கிடைக்கும் . அதிதேவதை அஷ்டவசு.

இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம்  பரி காரம் ஏற்படும்.

பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர்.  பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிப்பு  பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.

பிறப்பு - இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல்  உச்சரிபோரும் , புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

'ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்'

என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.


 
<< Start < Prev 41 42 43 44 45 Next > End >>

Page 42 of 45