அண்மையில் இந்தியாவில் மேற்கொள்ளபட்ட ஓர் ஆய்வுத்தகவல் இது: Print E-mail
Sunday, 20 January 2013 10:45

அண்மையில் இந்தியாவில் மேற்கொள்ளபட்ட  ஓர் ஆய்வுத்தகவல் இது:


ஆய்வு சொல்லும் முடிவுகள்:

சோதனை செய்யப்பட்ட எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல ஏகப்பட்ட சத்துக்களை உள்ளடக்கியதாகவோ, குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் நன்மை பயப்பதாகவோ இல்லை.

அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன. நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவாகும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருந்திருக்கிறது. கொழுப்பும் மிகுதி. ஆனால் தேவையான மற்ற சத்துக்களோ சொல்வதைவிடக் குறைந்த அளவில்! மிகக் குறைந்த அளவுக்கே நார்ச்சத்து, புரதம், கால்சியம் ஆகியன உள்ளன. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.பெற்றோர்கள் இந்த

விஷயத்தில் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். குப்பை உணவின் மூலமாக ஏற்படும் வளர்ச்சி உண்மையானது அல்ல. நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக நாமே காரணம் ஆகிவிடக் கூடாது'' என்றார் அக்கறையுடன்.

உண்மைதான். இந்த காலகட்டத்தில் எந்த விஷயத்தையுமே விழிப்பு உணர்வுடன்தான் அணுக வேண்டும்!

 

 
நல்ல துணையாவது நமசிவாயவே Print E-mail
Thursday, 25 December 2014 19:23

நல்ல துணையாவது நமசிவாயவே

எப்பொழுதும் நமக்கு நல்லதுணையாக இருப்பது நமசிவாய மந்திரத்தின் வடிவமாக விளங்கு சிவபெருமான் தான் என்பது மேன்மைமிகு பைந்தமிழர் போற்றும் சித்தாந்த சைவத்தின் துணிபு. பெருமானை உண்மை அன்போடு வழிபடுபவருக்கு இறப்பு பயம் தீர்த்து நல்லதுணையாக இருப்பவர் பெருமான் என்பதனை, “வஞ்சகம் அற்ற அடி வாழ்த்த வந்த கூற்று, அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே” என்று தமிழ்ஞானசம்பந்தர்
குறிப்பிடுவார். வேண்டியவர் வேண்டாதவர் என்று வேறுபாடுகாட்டாது தன்னை அன்போடு வழிபடும் அன்பருக்கு அருள்புரிவார் பெருமான். அவர் வஞ்சகம் அற்றவர். அதனால் அவர் நமக்கு நல்ல துணையாவார் என்கின்றார் சம்பந்தர்.

Panchadcharan

 
Madisaree Print E-mail
Saturday, 14 August 2010 00:38

 
How to were Panchakacham Print E-mail
Thursday, 02 September 2010 18:07

 
விநாயகரின் மூல மந்திரம் Print E-mail
Thursday, 25 December 2014 19:09

நண்பர்களே தெரிந்து கொள்ளுங்கள்.வழிபடுங்கள்!

விநாயகரின் மூல மந்திரம்

''ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா''

இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும்.

அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும். செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது

 
<< Start < Prev 41 42 43 44 45 Next > End >>

Page 41 of 45