மணிவாசகர் என்ன கூறுகிறார்? Print E-mail
Thursday, 25 December 2014 19:24

மணிவாசகப் பெருமானோ, பெருமான் எப்பொழுதும் நமக்கு நல்ல துணையாக இருக்கின்றார் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்று குறிப்பிடுவார். இதனால் நாம் கண் இமைக்கின்ற காலம் கூட நம்மை விட்டுப் பிரியாது நம்மைக் காக்கும் பெருமானே நமக்கு உற்ற நல்ல துணை என்பது தெளிவாகிறது
Panchadcharan

 
அக்னி ஹோத்ர வழிபாடு. Print E-mail
Thursday, 01 January 2015 15:06

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்.,

கர்மம் என்ற வார்த்தைக்கு ''யக்ஞம்'' என்று பொருள். யக்ஞம் என்றால், யாகம் வளர்த்து ,தேவர்களை வழிபட்டு பிரார்த்தனை செய்வது என்பது ஒரு பொருள். யக்ஞம் அல்லது யாகம் பல ஆண்டுகளாக இந்து தர்மத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.யாகம்,யக்ஞம் அக்னி ஹோத்ரம் முதலிய சடங்குகள் இப்பொது மேலை நாட்டவர்களினால்,குறிப்பாக ஜெர்மன் நாட்டவர்களினால் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் விளக்கங்கள் நமக்கு தரப்பட்டுள்ளன.'' Indian Express'' பத்திரிகையில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த Reiner shaippiyar என்பவர் தமது ஆராய்ச்சிக்குப் பிறகு வெளியிட்ட கருத்துக்களை நாம் இங்கே தருகிறோம்.
''''அக்னி ஹோத்ரம் எனப்படும் அக்னி வழிபாடும்,யாகம் அல்லது ஹோமம் எனப்படும் யக்ஞமும் ஒரு தவம்.அது நம்மை நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றன.. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் தூய்மை கேட்டிலிருந்து நம்மை காப்பாற்றுகின்றது.மேலை நாட்டில் உள்ள கடும் குளிர் காலத்தில் பொதுவாக தாவரங்கள் செத்து விடும்.தொடர்ந்து செய்த ஹோமங்களினால் அவை பிழைத்துக்கொள்கின்றன.
யாக குண்டத்தில் இருந்து வரும் புகை தொழிற்சாலைப்புகையால் ஏற்படும் விஷத்தை முறித்து சூழ் நிலையை புனிதப்படுத்துகிறது. யாக குண்டத்தில் இருந்து எடுக்கபட்ட ரக்ஷையை அணியும் போதும்,மற்ற பிரசாதங்களை சாப்பிடும் போதும் ஆரோக்கியத்தை அவை தருகின்றன.'' இதுதான் அந்த ஜெர்மன் ஆராய்ச்சியின் முடிவின் கருப்பொருள்.
''யக்ஞ சிஷ்டாசின ஸந்தோ மூச்யந்தே ஸ்ர்வகில் பிக்ஷை'' என்கிறது பகவத் கீதை. யக்ஞத்தில் மிஞ்சியதை சாப்பிடுகிறவர்கள்,பாவத்தில் இருந்து விடுபடுகிறார்கள் என்பது இதன் பொருள்.

-ஆன்மிக மலர் ஒன்றில் இருந்த தகவல்.

 
சாந்தி கர்மாக்களான சஷ்டியப்தபூர்த்தி..... Print E-mail
Sunday, 11 October 2015 11:25

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

சாந்தி கர்மாக்களான சஷ்டியப்தபூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீம ரத சாந்தி, விஜய ரத சாந்தி போன்ற வைபவங்களின் போதும், மற்றும் சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய மூன்று அபிஷேகங்களின் அங்கமாகவும் ஸ்ரீ ருத்ர ஏகாதஸினி தற்காலத்தில் செய்யப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ ருத்ர ஏகாதஸினீ என்பது மஹா பிராயஸ்சித்த கர்மாவாகும்.. மிகவும் விசேஷமானது. கர்மாக்களுக்கு அங்கமாக அல்லாமல் தனியாகவும், எப்போது நினைத்தாலும், ஒருவர் செய்து கொள்ளலாம்.
இதுவரை மனதாலும் சரீரத்தாலும் தெரிஞ்சும் தெரியாத வகையிலும் இழைத்த பாபங்களுக்கு இந்த சிவாராதனை மூலம் பிராயஸ்சித்தம் செய்யப்படுகின்றது.
இந்த மகத்தான் சிவாராதனையை பற்றி சற்று சுறுக்கமாக இப்போது இங்கே பார்க்கலாம்.
1. குறைந்தது 11 ருத்விக்குகள் (வைதீகர்கள்) ஸ்ரீ ருத்ர ஜபத்திற்கு தேவை. ஹோம சமயத்தில் 12 பேர் தேவைப்படும்.

2. தம்பதிகளுக்கு விஸ்தாரமான சங்கல்பம் செய்து வைக்கப்படும்.. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அப்யுதயம், புண்யாஹவாசனம், தானாதிகள் முதலியவைகள் உண்டு. 3.. கலச ஸ்தாபணம் : 12 சிறிய கலசங்களும் ஒரு ப்ரதான (பெரிய) கலசமும் தேவைப்படும். கலசங்களில் ஜலத்தை நிரப்பி அலங்காரம் செய்து ஒவ்வொரு கலசத்திலும் ஒவ்வொரு தேவதா மூர்த்தி (பரமேஸ்வரின் அம்ஸம்) ஆவாஹநம் செய்யப்படும்.
ஆவாஹநம் செய்யப்படும் பெயர்கள் இதோ:
சாம்ப-பரமேஸ்வரர், மஹாதேவர், சிவம், ருத்ரம், சங்கரம், நீலலோஹிதம், ஈசாநம், விஜயம், பீமம், தேவதேவம், பவோத்பவம் ஆகிய தேவாதா மூர்த்திகளை 11 கலசங்கள் ஒவ்வொன்றிலும் ஆவாஹநம் செய்வார்கள். பிரதான கலசத்தில் ஆதித்யாத்மக ஸ்ரீ ருத்ரம் ஆவாஹநம் செய்யப்படும். மீதி இருக்கும் ஒரு சிறிய கலசம் புண்யாஹவாசந கலசமாகும்.
4.. மஹந்யாஸத்துடன் கர்மா துவங்கும். மஹந்யாஸத்தில் ஷோடஸாங்க ரெளத்ரீகரணம், ஷடாங்க ந்யாஸம், சிவ சங்கல்பம், ஆத்ம ரக்ஷா, புருஷ சூக்த பாராயணம், தொடர்ந்து அப்ரதிரத: போன்ற சில வேத மந்த்ரங்கள், 8 தடவை அனைவரும் நமஸ்காரம் செய்தல், கலச தேவதைகளுக்கு ஷோடஸ உபசாரங்கள், த்ரிசதி அர்ச்சனை, பதின்மூன்று நமஸ்காரங்கள், அனைவரும் சேர்ந்து த்யான ஸ்லோகம் சொல்லுதல், சமக மந்த்ரங்களுடன் பிரார்த்தனை, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிண நமஸ்காரம் போன்றவைகள் பல இடம் பெறும்.

4. பிறகு 11 தடவை ஸ்ரீ ருத்ர ஜபம்.
அதே சமயத்தில் ஸ்வாமிக்கு, பஞ்சாயதன மூர்த்திகளுக்கு, 11 த்ரவ்யங்கள் மூலம் வரிசை க்ரமமாக அபிஷேகம் யாராவது ஒருவர் செய்வார்.
5.. தொடர்ந்து 12 ருத்விஜர்களுடன் ருத்ர ஹோமம் - ஹோம இறுதியில் வஸோர்தார ஹோமம். இதில் பூர்ணாஹுதி தனியாக சொல்லப்படவில்லை.
6. கலசங்களை யதாஸ்தானம் செய்து அந்த ஜலத்தை வைதீகாள் மூலம் தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்வித்தல்.
7. கலசங்களுடன் தக்ஷிணையை சேர்த்து வைதீகாளுக்கு சம்பாவனையாக அளித்து ஆசி பெறுதல். ஹாரத்தியுடன் மங்களகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்பேற்பட்ட மகத்தான, சக்தி வாய்ந்த ஸ்ரீ ருத்ர ஏகாதஸநீயில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் பாரம்பரிய உடையில் சென்று பக்தி ச்ரத்தையுடன் பங்குபெற்று எல்லா க்ஷேமங்களையும் அடைய எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை ப்ரார்த்திக்கின்றேன்.

- நன்றி சர்மா சாஸ்திரிகள்.

தொகுத்தவர் : பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா

 
லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம் Print E-mail
Sunday, 11 October 2015 11:21

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

'''லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ரராஜ தனயாம்
ரங்க தாமேஸ்வரீம்
தாஸீபூத ஸமஸ்த தேவ வனிதாம்
லோகைக தீபாங்குராம்'

என்கிற ஸ்லோகத்தைச் சொல்லிப் பிரார்த்திக்கிறோம்.

பெண்கள் கல்யாணம் வரை பிறந்த வீட்டில் இருப்பார்கள். கல்யாணத்துக்குப் பிறகு புகுந்தவீடே, அவர்களுடைய வீடாகிவிடும். தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் வேண்டுமானால், பிறந்த வீட்டுக்கு வந்து சீர்பெற்றுச் செல்லலாம். இப்படி மஹாலக்ஷ்மிக்கு பிறந்த வீடு திருப்பாற்கடலாகவும், புகுந்த வீடு வைகுண்டமாகவும் இருந்தாலும், அவள் எப்போதும் நிரந்தரமாக இருப்பது எங்கே தெரியுமா? ரங்கத்தில்தான்! அதனால்தான் 'ரங்க தாமேஸ்வரீம்' என்று அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
தீபத்தின் ஒளியானது தன்னை மட்டும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றி இருப்பவற்றையும் வெளிப்படுத்துகிறது. அதுபோல்தான் மஹாலக்ஷ்மியும்! தன்னை வெளிப்படுத்திக்கொள்வதுடன், தன்னைச் சரண் அடைந்தவர்களையும் சிறப்புறச் செய்வாள்! அவளுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்ள யாருடைய சிபாரிசும் தேவையில்லை
-நன்றி, வேளுக்குடி கிருஷ்ண சுவாமிகள்.

தொகுத்தவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
யஜுர் வேதத்தின் தலை சிறந்த............ Print E-mail
Sunday, 11 October 2015 11:28

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதி ஸ்ரீருத்ரம், யஜுர்வேத தைத்திரீய ஸம்ஹிதை காண்டங்கள் ஏழினுள், நான்காவதில், நடுநாயகமாக உள்ளது இது. பாதாதி கேச வர்ணனையில், முக்கால் பகுதியில் ஹ்ருதயம் அமைவது போல, 11 அனுவாகங்களைக் கொண்ட ருத்ர ப்ரச்னத்தில் எட்டாவது அனுவாகத்தில், இருதய ஸ்தானத்தில், இருப்பது சிவ பஞ்சாக்ஷர மந்திரம் மேலும் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஸ்ரீருத்ரத்தின் 11-வது அனுவாகத்தில் அமைந்துள்ளது. இக்காரணங்களினால், நித்திய பூஜையிலும், ஜபத்திலும், ஹோமத்திலும் தொன்றுதொட்டு ஆஸ்திகர்களால் ஸ்ரீருத்ரம் கையாளப்பட்டு வருகிறது.

 

MIH-சார்பில் தகவல் திரட்டியவர் :பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 29