அறிவோம் நண்பர்களே ஆனி மாத சிறப்புக்களை: Print E-mail
Sunday, 19 June 2016 11:15

அறிவோம் நண்பர்களே ஆனி மாத சிறப்புக்களை:

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம் பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திரு மஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷே கங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.

 
ஆனிமாதமும் ஆடல் வல்லானும்! Print E-mail
Sunday, 19 June 2016 11:17

'நண்பர்களே, ஆனி மாத சிறப்புகள் பற்றி அறிவோம்!

''ஆனிமாதமும் ஆடல் வல்லானும்!

ஆ டல் வல்லான், திருக்கூத் தன், தில்லையுட் கூத்தன் எனப் பல விதமான திருநாமங்களில் சிதம்பரம் நடராஜரை பக்தர்கள் அழைப்பார்கள்.

சைவத்தில் பொதுவாக ‘கோயில்’ என்று சொன்னாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். அதனால்தான் சிதம்பர மகாத்மியத்தைக் கூறும் நூல் ஒன்று ‘கோவில் புராணம்’ என்றே அழைக்கப்படுகிறது. சிதம்பரத்துக்கும் ஆனி மாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு, வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது.முதலாவது, ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்துக்குப் பத்து நாட்கள் முன்னதாகக் கொடியேற்றுவர். முதல் நாளில் இருந்து எட் டாம் நாள் திருவிழா வரை ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசிவா னந்த நாயகி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண் டேஸ்வரர் ஆகிய பஞ்ச (உற்சவ) மூர்த்திகளும் ஒவ் வொரு நாளும் திருவீதி உலா வருவார்கள்.ஒன்பதாம் நாள் தேர்த் திரு விழா. அன்று மூலவரான ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தேர்களில் திரு வீதியுலா வருவார்கள்.

ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள் இருவரையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து காலையில் சூரிய உதயத்துக்கு முன் அபிஷேகம் செய்து மறுபடியும் திருவாபரணங்களைச் சார்த்தி அர்ச்சனை, பூஜை ஆகியவற்றைச் செய்வார்கள்.

பகல் ஒரு மணியளவில் ஸ்வாமி யையும் அம்பாளை யும் ஆனந்த நடனம் ஆடச் செய்வர்.பின்பு சித்சபா பிர வேசத்துடன் தீபாராதனை நடைபெறும். இப்படி எல்லாம் முடிந்து பத்தாம் நாள் கொடி இறக்கும் வரை நடப்பதே பிரம்மோற்சவம்.

மறு நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெறும். இரண்டாவது பிரம் மோற்சவம் மார்கழியில் நடைபெறும்.

 
ஏன் தீபாராதனை காட்டபடுகிறது? அறிந்து கொள்வோம். Print E-mail
Sunday, 19 June 2016 11:32

நண்பர்களே, ஏன் தீபாராதனை காட்டபடுகிறது? அறிந்து கொள்வோம்.

பூஜையில் இறைவனுக்குச் செய்யப்படும் பதினாறு வகை உபசாரங்களில் தீப ஆரத்தியும் ஒன்று. அதை வடமொழியில் ஷோடச உபசாரா என்று சொல்வார்கள். பூஜை காலத்தில் தீப ஆரத்தி எடுப்பதற்கு முன்பு இறைவன் விக்கிரகத்தின் முன் திரை போட்டு இருப்பார்கள். அந்தத் திரை மறைப்பதால் நம்மால் இறைவனைக் காண முடியாது. ’நான்’ என்னும் அறியாமைத் திரை நம்முள் இருக்கும் வரை அதைத் தாண்டி உள்ள எல்லாம் வல்ல இறைவனை நம்மால் அறிந்து கொள்ள முடியாது என்பதை அது குறிக்கிறது. அந்தத் திரை விலகினால் மட்டுமே இறைவனைக் காண முடியும். அப்போதும் கூட இறைவன் மிகத் தெளிவாகத் தெரிவது இல்லை. இறைவனை மிகத் தெளிவாக அறிய ஞானம் என்ற விளக்கு வேண்டும். அந்த ஞான விளக்கொளி இருந்தால் தான் இறைவனை முழுமையாகத் தரிசிக்கும் அனுபவம் வாய்க்கும். அந்த ஞான ஒளி தான் தீப ஆரத்தி. நான் என்னும் ஆணவத் திரை விலகிய பின்னர் ஞானத்தின் துணையுடன் இறைவனைக் காண முடியும் என்பதை தீப ஆரத்தி விளக்குகிறது.திரை விலகுதல், தீப ஆரத்தி காட்டுதல், இருள் நீங்குதல், இறைவனைக் காணல் எல்லாம் ஏக காலத்தில் நிகழ்வது போல ஆணவம் விலகி, ஞானம் பெற்று, அறியாமை நீங்கி, இறைவனை உணர்தல் எல்லாம் ஏக காலத்தில் மனிதன் மனதில் நிகழ வேண்டும் என்பதை தீப ஆரத்தி குறிப்பால் உணர்த்துகிறது.

-''அர்த்தம் உள்ள இந்து மாதம்''; prepared by panchadcharan swaminathasarma

 
ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்: Print E-mail
Sunday, 19 June 2016 11:24

நண்பர்களே, தெரிந்து கொள்வோம்.

ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! ‘சதமானம் பவதி சதாயு புருஷ: அதாவது நோய் இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ்வதே சிறந்தது’ என்றுதான் வேதமும் சொல்கிறது. மனித சரீரத்துக்கு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் உபாதைகள், பிறவியிலேயே ஏற்பட்ட ரோகங்கள், மற்றவர்களால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள், நீண்டகாலம் உள்ளேயே இருந்து முற்றிய நிலையில் வெளிப்படும் நோய்கள் எனப் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த ரோகங்கள்எல்லாம், ‘ஜன்மாந்தர கிருதம் பாபம் வ்யாதிரூபேண ஜாயதே தச்சாந்தி: ஔஷதய்: தானை: ஜப ஹோம அர்ச்சனாதிபி:’ முன் ஜன்ம பாவங்களின் விளைவாகவே மனிதர்களுக்கு வியாதிகள் ஏற்படுகின்றன என்றும், அவற்றிலிருந்து நிவாரணம் பெற மருந்தை உட்கொள்வது மட்டுமல்லாமல், ஜப, ஹோம, பூஜைகளையும் செய்யவேண்டும் என்றும் யோகரத்னாகரம் என்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது.பூர்வஜன்ம வினைப்பயனாக நமக்கு ஏற்படக்கூடிய சகல விதமான ரோகங்களில் இருந்து விடுபடவும், நோய் இல்லாமல் வாழவும் வேதங்கள் அருளிய அற்புதமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம். மிருத்யுஞ்சய என்றால், மிருத்யு என்ற யமனை ஜெயிப்பது என்று பொருள். ‘மிருத்யோர் மிருத்யு’ என்று போற்றப்பெறும் பரமேஸ்வரனிடம், மரண பயத்தை நீக்கவும், ஆயுள் விருத்திக்காகவும் பிரார்த்திக்கும் மந்திரமே மகா மிருத்யுஞ்சய மந்திரம். பொதுவாக, எல்லாவிதமான நோய்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு சப்த திரவிய மகா மிருத்யுஞ்சய மந்திரம் சிறந்தது என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் என்ற முப்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.

மகா மிருத்யுஞ்சய ஹோமம் என்பது 21 மந்திரங்கள் கொண்டது. அது வேதவிற்பன்னர்களால் செய்யப்படுவது. இருப் பினும், அவற்றுள் சிறந்த மந்திரமாக இருப்பது 'த்ரயம் பக' மந்திரம் ஆகும்.

மந்திரம்:''ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்

உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்''

இந்த மந்திரத்தின் ரிஷி: ககோள ரிஷி; சந்தஸ்: அனுஷ்டுப்; தேவதை: அம்ருத ம்ருத்யுஞ்சய ருத்ரர்; பீஜ மந்திரம்: சாம் சீம் சூம் சைம் சௌம் ச:

மந்திரத்தை ஜபிப் பதற்கு முன்பாகச் சொல்ல வேண்டிய தியான ஸ்லோ கத்தின் பொருள்:

‘பார்ப்பதற்கு நளினமாக இருப்பவரும், தலையில் ரேகையாக கங்கையை உடையவரும், அழகான கழுத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னியைக் கண்களாகக் கொண்டவரும், நான்கு கரங்களில் அபயம், பாசம், வேதங்கள் மற்றும் ஸ்படிகத்தாலும் வெண் முத்துக்களாலும் ஆன அட்சமாலை ஆகியவற்றை ஏந்தியவரும், சுபம் தரக்கூடிய வெண்மை நிறத்தவராகவும் விளங்கும் பரமேஸ்வரனை வணங்குகிறேன்!’

இப்படிப் பரமேஸ்வரனை தியானித்துவிட்டு, த்ரயம்பக மந்திரத்தை ஜபித்தால், நோய் இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.இந்த மிருத்யுஞ்சய ஹோமத்தில் அருகம்புல், சீந்தில்கொடி, சமித்து, அன்னம், நெய், பால், நெல் ஆகிய 7 திரவியங்கள் பிரதானமாக இடம்பெறுகின்றன. சீந்தில்கொடி அதிக மருத்துவ குணம் கொண்டது. கேன்சரையும் குணப்படுத்தவல்லது. அருகம்புல் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

- நன்றி:வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்--prepared by panchadcharan swaminathasarma

 
நண்பர்களே, அறிவோம் தெளிவோம். Print E-mail
Sunday, 19 June 2016 11:34

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்.

கர்ம காண்டத்தின் தொழில்கள் காரணமாக ஜாதி உண்டு. ஞான காண்டத்தில் ஜாதி இல்லை; யாவரும் சந்நியாசி ஆகலாம். லௌகீக வாழ்க்கையையும், தெய்வ நம்பிக்கையையும் ஒன்றாக இணைத்தது இந்து மதம். உணவு, மருத்துவம், தொழில் அனைத்திலும் பாவ புண்ணியங்களைக் காட்டுவது இந்து மதம். உடல் இன்பத்தைக் ஒப்புக்கொண்டது இந்து மதம். அதற்கு மேற்பட்ட துறவு நிலையிலும் ஆதிக்கம் செலுத்துவது இந்து மதம். இன்பங்களுக்குச் சடங்குகள் செய்வது இந்து மதம். துன்பங்களுக்கு ஆறுதல் சொல்வது இந்து மதம். ஆகவேதான், எந்த நிலையிலும் ஒரு இந்துவுக்குக் கடவுள் நம்பிக்கை எழுந்துக்கொண்டே இருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்குத் தப்ப முடியாது. `ஆஸ்தி’ என்றால் சொத்து. `நாஸ்தி’ என்றால் பூஜ்ஜியம். `நாஸ்திகன்’ ஒன்றுமில்லாத சூனியம். இந்துவின் கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கிறான். ஆகவே, நாஸ்திகனும், இந்துவே; ஆஸ்திகனும் இந்துவே. இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.

-நன்றி ''அர்த்தம் உள்ள இந்து மதம்''

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 30 of 39