பப்பாளிப் பழம்-மருத்துவம் Print E-mail
Sunday, 19 June 2016 11:31

மருத்துவக் குறிப்பு:

பப்பாளியில் உள்ள இன்சால்யபிள் ஃபைபர், பசி உணர்வு அடிக்கடி ஏற்படா மல் தடுக்க உதவும். காலை உணவுடன் பப்பாளி பழம் சாப்பிட்டால்... தேநீர், ஸ்நாக்ஸ் என்று மனம் தேடாது. வெயிட் நம் கன்ட்ரோலில் இருக்கும்.

 
மருத்துவ சம்பந்தமான குறிப்பு இது : Print E-mail
Sunday, 19 June 2016 11:38

மருத்துவ சம்பந்தமான குறிப்பு இது :

நண்பர்களே அறிந்து கொள்வோம்.

சாதரணமாக நாம் உண்ணும் பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. மருத்துவக் குணங்கள்; 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் “”அரைக்கீரை.”” 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் “”மணத்தக்காளிகீரை””. 7) உடலை பொன்னிறமாக மாற்றும் “”பொன்னாங்கண்ணி கீரை.”” 8) மாரடைப்பு நீங்கும் “”மாதுளம் பழம்.”” 9) ரத்தத்தை சுத்தமாகும் “”அருகம்புல்.”” 10) கான்சர் நோயை குணமாக்கும் “” சீதா பழம்.”” 11) மூளை வலிமைக்கு ஓர் “”பப்பாளி பழம்.”” 12) நீரிழிவு நோயை குணமாக்கும் “” முள்ளங்கி.”” 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட “”வெந்தயக் கீரை.”” 14) நீரிழிவு நோயை குணமாக்க “” வில்வம்.”” 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “”துளசி.”” 16) மார்பு சளி நீங்கும் “”சுண்டைக்காய்.”” 17) சளி, ஆஸ்துமாவுக்கு “”ஆடாதொடை.”” 18) ஞாபகசக்தியை கொடுக்கும் “”வல்லாரை கீரை.”” 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் “”பசலைக்கீரை.”” 20) ரத்த சோகையை நீக்கும் “” பீட்ரூட்.”” 21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் “” அன்னாசி பழம்.”” 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் “”தூதுவளை”” 25) முகம் அழகுபெற “”திராட்சை பழம்.”” 26) அஜீரணத்தை போக்கும் “” புதினா.”” 27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” 28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு:: தகவல் தொகுத்தவர் -பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா

 
ஆடிப்பூரம்- அறிந்து கொள்வோம். Print E-mail
Sunday, 11 October 2015 13:39

ஆடிப்பூரம்- அறிந்து கொள்வோம்.

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.:தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
Thirumurai - Medicine to sufferings Print E-mail
Saturday, 03 July 2010 12:40

The Lord shiva who gives even Itself for the one who completely surrenders to it and serves selflessly, takes care of such a devotee in all the ups and downs of the life leading the devotee to the liberation. That would be the ultimate boon. Still people look for some helping hand when they are in some deep trouble. Many get mislead also going behind miracle performers and get cheated many times. The result is more pain than the temporary well being they get. 
The shaivite saints have sung the holy hymns - thirumuRai in a great spiritual wisdom and seeking only the Truth. The splendid powerfulwords ( mantram) and the unadultrated devotion on Lord shiva being the base, these hymns give the great cure for many of the sufferings in life. Instead of looking for unreliable sources for betterment one should seek the thirumuRai path which apart from giving the benefit would slowly lead one to be set in the path towards the Almighty. Even those who do devotion without asking for returns would find these to be very enchanting hymns. To get the blessings of the Three eyed Lord sing THIRUMURAI hymns.

 
இந்த உடல் தேவாலயம் Print E-mail
Sunday, 11 October 2015 13:41

இன்றைய சிந்தனை:

இந்த உடல் தேவாலயம். அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் என்றும் விளங்கிக் கொண்டிருக்கும் கடவுள். அறியாமை என்கிற நிர்மால்யத்தை (முதல் நாள் பூஜையில் நிறைந்த பழைய புஷ்பங்கள்), அகற்றி, அந்த ஜீவன்தான் கடவுள் என்று வழிபாட்டில் ஈடுபடு’ என்பது மகான்களின் அறிவுரை (தேஹோதேவாலய: ப்ரோத்தோ…).

‘உன்னில் உறைந்திருக்கும் ஆன்மாதான் (ஜீவாத்மா) கடவுள் என்பதை மறைக்கும் அறியாமையை (நிர்மால்யத்தை) அகற்றினால் தெய்வம் பளிச்சிடும்; வழிபட இயலும்!’ – இது ஸனாதனத்தின் சாரம்

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 29 of 44