பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!! Print E-mail
Tuesday, 18 September 2012 11:19

பானை போல வயிறு இருக்கா? ஈஸியா குறைக்கலாம்!!!

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!!!

home remedies obesity

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.


* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

 
சிசுக்களை அழ வைக்கும் டயப்பர் டார்ச்சர் Print E-mail
Saturday, 29 September 2012 09:19

சிசுக்களை அழ வைக்கும் டயப்பர் டார்ச்சர்

குழந்தையை மெத்தையில் படுக்கவைக்கும்போது சிறுநீர், மலம் கழித்தால் மெத்தை வீணாகிவிடும் என்பதால் டயப்பர் அணிவித்து இருக்கிறார்கள். ஒன்றிரண்டு முறை குழந்தை மலம் கழித்ததை உடனே கவனிக்காமல் விட்டுவிட, அதில் உள்ள கிருமிகள் சருமத்தினுள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

குழந்தையுடன் வெளியில் கிளம்பும்போது அணிவிக்கும் டயப்பரை, மறுபடியும் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை பல அம்மாக்கள் அகற்றுவதில்லை. குழந்தை சிறுநீர் கழித்தாலும், 'டயப்பர்தான் ஈரத்தை உறிஞ்சிவிடுமே’ என்று அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். வேறு சில அம்மாக்களோ குழந்தையை இரவு தூங்கவைக்கும்போது அணிவிக்கும் டயப்பரை, காலையில்தான் கழட்டுகிறார்கள். டயப்பரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து அலசுகிறார்கள் குழந்தை நல மருத்துவர் ராமச்சந்திரனும்  தோல் சிகிச்சை நிபுணர் ஜானகியும்.

'நம்மூரில் வீட்டில் இருக்கும் பழைய துணியைக் கிழித்துக் கோவணம்  கட்டுவார்களே... அதுதான் டயப்பருக்கான ஆரம்பம்.  வெளிநாட்டினர் அதில் சில மாற்றங்களைச் செய்து தற்காலத்துக்கு ஏற்றபடி நாகரிகமாக டயப்பர், நாப்கின் என்று விளம்பரப்படுத்தி விற்றுவருகின்றனர். உண்மையில் நம்முடைய கோவணம் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உடை. காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. மறுபடியும் துவைத்துப் பயன்படுத்தலாம். காற்றோட்டமாக இருக்கும். குழந்தை சிறுநீரோ, மலமோ கழித்தால் வெளியில் தெரியும். உடனே மாற்ற முடியும். ஆனால், வெளியில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும்போது அடிக்கடி துணி மாற்றும் நிர்பந்தம் ஏற்படுவது கோவணம் ஏற்படுத்தும் அசவுகரியம். இதன் காரணமாகவே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஈரத்தை உறிஞ்சக்கூடிய வகையிலான டயப்பர் வந்தது.

பொதுவாக, குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருக்கும். டயப்பர் அணிவிக்கப்படும் பகுதிகள் காற்றோட்டம் இல்லாமல் ஈரத்தன்மையுடன் காணப்படும். இதனால், தோலில் உள்ள சில பாக்டீரியாக்கள் வியர்வையுடன் வினைபுரிந்து காரத்தன்மையை அதிகமாக்கிவிடும். இது தொற்றுக்களை எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சருமத்தை மாற்றிவிடும். எனவே, இந்தச் சமயத்தில் குழந்தை சிறுநீர், மலம் கழித்தபிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் கிருமிகள் உட்புகுந்து சருமத்தில் அரிப்பு, புண், எரிச்சல், சிவந்துபோதல், தோல் உரிதல் போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். இந்தப் பிரச்னைகளை 'டயப்பர் டெர்மடைட்டிஸ்’ (Diaper Dermatitis) என்பார்கள். இதனால், குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சரியாகத் தூங்காது, சாப்பிடாது. ஒருவித உறுத்தல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை சற்றுக் குறைவாக இருக்கும். காரணம், தாய்ப்பாலில் அதிக அமிலத்தன்மை இருக்கிறது. இதனால், பாக்டீரியாவும் வியர்வையும் சேர்வதால் உண்டாகும் காரத்தன் மையை இது சமப்படுத்தும். ஆனால், புட்டிப்பாலில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், அதைப் பருகும் குழந்தைகளுக்கு டயப்பர் தொடர்பான பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

டயப்பரிலேயே குழந்தை சிறுநீர், மலம் கழித்தால் வெளியில் தெரியாது. எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை டயப்பரைக் கழற்றி சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தை முகம் சுளித்தாலோ, மலம் கழித்த வாடை தெரிந்தாலோ டயப்பரைக் கழற்றிப் பார்க்க வேண்டும். ஒருவேளை மலம், சிறுநீர் கழித்திருந்தால் டயப்பரைக் கழற்றி அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஈரம் போக நன்றாகத் துடைத்துவிட்டு புதிய டயப்பர் அணிவிக்கலாம்.

குழந்தை மலம், சிறுநீர் கழிக்காவிட்டால் எவ்வளவு நேரம் டயப்பரைப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி இப்போது எழலாம். ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே டயப்பரைப் பயன்படுத்தலாம். அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஐந்து நிமிடங்கள் டயப்பரைக் கழற்றி, காற்றோட்டமாக இருக்கும்படி விட்டுவிட வேண்டும். வியர்வை இருந்தால் நன்றாகத் துடைத்துவிட்டு மறுபடியும் அணிவிக்கலாம்.

எலாஸ்டிக், ஒட்டக்கூடிய டேப் என இரண்டு வகைகளில் டயப்பர்கள் கிடைக்கின்றன. குழந்தையின் உடலுடன் ஒட்டி இறுக்கமாக இருக்கும், ஈரம் வெளியில் கசியாது என்பதால் பல பெற்றோர்கள் எலாஸ்டிக் வகை டயப்பரைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால், இந்த எலாஸ்டிக் வகை டயப்பர் சில சமயங்களில் குழந்தையின் சருமத்தில் அழுத்தமாகப் பதிந்து பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு எனப் பிரத்யேகமாக உள்ள கிரீம்களைப் பயன்படுத்தலாம். டேப் வகை டயப்பர்களில் இந்தப் பிரச்னை இருக்காது. மேலும், ஓரளவு காற்றோட்டமும் இருக்கும். எளிதாக அகற்றவும் முடியும்.

டயப்பர்களைப் பொருத்தவரை, தரமானதாகப் பார்த்து வாங்க வேண்டும். தற்போது சூப்பர் அப்சர்வ் காட்டன் டயப்பர்கள் கிடைக்கின்றன. இவை ஈரத்தை நன்றாக உறிஞ்சும். மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வகை டயப்பர்களில் 'எமோலியன்ட்’ (Emollient) என்கிற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதனால் எரிச்சல் இருக்காது.

டயப்பர் அணிவிக்கும் உடல் பாகத்தில், ஈரம் இல்லாமல் துடைத்து உலர்வாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியம்!'

 
நோய்களைத் தடுக்க... Print E-mail
Saturday, 10 November 2012 10:33

நோய்களைத் தடுக்க...

எலும்பு அடர்த்தி தேய்மானம் ஏற்படும்போது 'ஆஸ்டியோபொரோசிஸ்’ தாக்கலாம்.  இதனால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படக்கூடும். கால்சியம், வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கீரை, அசைவ உணவுகள் உட்கொள்வதன் மூலமும், சருமத்தில் சூரிய ஒளிபடுவதன் மூலமும் இதைத் தடுக்கலாம்.

எங்காவது அடிபட்டால், விழுந்தால், சிலருக்கு ரத்தம் உறையாமல் இருக்கும். உடலில் வைட்டமின் கே பற்றாக்குறைதான் இதற்குக் காரணமாக இருக்கும். பச்சைக் காய்கறிகள், பசலைக் கீரை சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.

உணவு சாப்பிட்ட பிறகு அல்லது பசி எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல், வயிற்றுப் புண் வரலாம். மூன்று வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மற்றும் இரவில் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.

மொச்சை, காராமணி, கோஸ், காளிஃப்ளவர், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் சிலருக்கு வாயுத் தொல்லையை அதிகரிக்கச் செய்யும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

அதிக டென்ஷன், அதிகமான உடலுக்கு உழைப்பு இல்லாததுபோன்ற காரணத்தாலும் அசிடிட்டி வரலாம். கார, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து நேரத்துக்கு உண்ணப் பழக வேண்டும்.

நார்ச் சத்து உணவுகளை அதிகம் சேர்த்துகொள்வது, அதிகத் தண்ணீர் அருந்துவதன் மூலம் மலச் சிக்கல்பிரச்னையை விரட்டலாம்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைத் தவிர்த்து, கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களைச் சிறிதளவு சாப்பிடலாம்.

வறுத்து பொரித்த எண்ணெய் பதார்த்தங்களைத் தொடவே கூடாது. விசேஷ நாட்களில் வீட்டில் செய்த பதார்த்தங்களை சிறிதளவு சாப்பிடலாம்.  உண்ணும் உணவில் அடங்கி உள்ள கொழுப்பு மற்றும் தேவையற்ற சத்துக்களும் உடலில் ஏற்படும் ஜீரண மாற்றத்தால் முழுவதுமாக எரிக்கப்படாமல் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் தங்கி உடல் பருமனை உண்டாக்கிவிடும். இடுப்பு, வயிறு போன்ற தேவையற்ற பகுதிகளில் தசையுடன் சேர்ந்து அழகையே கெடுத்துவிடும்.

பீட்சா, பர்கர், பரோட்டா, சமோசா போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்பு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிட்டால், நன்றாகப் பசித்து சாப்பிடமுடியும்.

சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வது ஆரோக்கியத்துக்கு கெடுதல். உடல் எடை கூடுவதுடன் ஒபிசிட்டி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

உண்ணும் உணவுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உண்டு என்பதால், சமையலறைக்குள் நுழையும்போதே சங்கடங்களைக் களைந்துவிடுங்கள். உற்சாகமான மனநிலையில் சமைக்கும் பதார்த்தங்கள், படு ருசியாக இருக்கும் என்பது கண் கண்ட உண்மை. பெரும்பாலான வீடுகளில் இசையைக் கேட்டபடி சமைப்பதைப் பார்க்க முடியும்.  இன்னிசையைக் கேட்கும்போது, சஞ்சலங்கள் நீங்கி சமையலும் கமகமக்கும்.

தரமான உணவு, அளவான உணவு, போதிய உடற்பயிற்சி, போதும் என்கிற மனம் இந்த நான்கும் இருந்தால் பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாது.

 
உணவின் மூலம் வரலாம் 'மூலம்' என்னும் நோய். Print E-mail
Friday, 26 October 2012 16:43

ணவின் மூலம் வரலாம் 'மூலம்' என்னும் நோய்.

''மூல நோய் என்றால் என்ன?''

''மூல நோயின் மருத்துவப் பெயர் ஹெமராய்ட்ஸ்(Haemorrhoids). முறையான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்காமல் போவதும், மலச் சிக்கல் பிரச்னை பெரிய அளவில் தொடர்வதுமே மூல நோய்க்கு முக்கியக் காரணம்.''

''உணவுப் பழக்கமும் மலச் சிக்கலும் எப்படி மூல நோயை உருவாக்கும்?''

''நம்முடைய உணவு சரிவிகிதச் சமச்சீர் உணவாக இருப்பது உடல் வலுவோடு இருக்க மட்டும் அல்ல; அதன் சீரான இயக்கத்துக்கும் முக்கியம். குறிப்பாக, நீர்ச் சத்தும் நார்ச் சத்தும் உள்ள உணவை எடுத்துக்கொள்ளாவிட்டால், மலம் வெளியேறுவது சிக்கல் ஆகும். உடலில் சூடு அதிகரிக்கும். செரிமானம் கோளாறாகும். மலம் கெட்டிப்பட ஆரம்பிக்கும்.

நம்முடைய ஆசன வாயைச் சுற்றிலும் நிறைய ரத்தக் குழாய்கள் இருக்கும். இவை இயல்பாக இருக்கும்போது பிரச்னை எதுவும் இல்லை. அதாவது தினமும் உடற்கழிவுப் பொருட்கள் மலக்குடலை வந்து அடையும்போது, அவை சற்றே நெகிழ்வாக நீர்ப்பதத்துடன் இருக்கும். குறிப்பிட்ட நேரத்துக்குள் மலம் வெளியேறிவிட்டால் பிரச்னை இல்லை.

அவ்வாறு வெளியேறாமல், மலச் சிக்கல் ஏற்பட்டால்,  அதில் உள்ள நீர் காய்ந்துவிடும். இதனால், மலம் இறுகிக் கெட்டியாகிவிடும். அதன் பின் அதை வெளியேற்ற மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். இப்படிக் கூடுதல் அழுத்தம் கொடுத்து, முக்கி மலத்தை வெளியேற்றும்போது மலத் துவாரம் இயற்கையாக ஏற்படுகின்ற வழவழப்புத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து அந்த இடத்தில் இருக்கும் ரத்தக் குழாய்கள் சேதமாகிப் புடைக்க ஆரம்பிக்கும். மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்கும்போது குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்படும். இதன் விளைவே மூலநோய்.

''மூல நோயில் நிலைகள் உண்டா?''

''நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் இரு நிலைகளில், முதலில் ரத்தம் வடிய ஆரம்பிக்கும், பெரிதாக வலி இருக்காது. அதன் பின் கொஞ்சம் வெளியே புடைக்கும். ரத்தம் வடிவதுடன் வலியும் சேர்ந்துகொள்ளும். அடுத்த இரு நிலைகளில், மலப் பாதையின் கடைசிப் பகுதி வெளியே வந்து துருத்திக்கொண்டு இருக்கும். தொடர் வலி, ரத்தம் கசிதல், அரிப்பு, எரிச்சல் என்று வாட்டி எடுத்துவிடும்.''

''மூலம் எதனால் வருகிறது?''

''தவறான அல்லது உடலுக்கு ஒவ்வாத உணவுப் பழக்கம். தொடர்ந்து நார்ச் சத்து குறைவான உணவுகளை உட்கொள்வதாலும், அடிக்கடி ஃபாஸ்ட் புட் உணவு வகைகளை உட்கொள்வதாலும், தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும், மாமிச உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் வரலாம். அடுத்து, அதீத சூடு. நேரம் தவறிய தூக்கம். கடுமையான வேலை. ஒரே இடத்தில் ஆணி அடித்ததுபோல் உட்கார்ந்து வேலை பார்ப்பது. மலம் வரும்போது, வேலைநிமித்தம் தள்ளிப்போடுவது. இப்படி பல காரணங்களால் வரலாம்.''

''இந்த நோய் யாருக்கு வரக்கூடும்?''

''எந்த வயதிலும் யாருக்கும் வரலாம்.''

''இதற்கு என்ன சிகிச்சை?''

''ஒரு நாளைக்கு ஏழு மணி நேர ஆழ்ந்த தூக்கம், இரு முறை குளியல், நேரத்துக்கு அதிகக் காரம் இல்லாத சாப்பாடு. வாழைப் பழம், கீரை, மோர் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படி ஓர் ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்தாலே மூலத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மலச் சிக்கல் பிரச்னை இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி.

மருத்துவச் சிகிச்சை என்பது ரத்தக் குழாய்கள் சுருங்குவதற்கும், அந்தப் பகுதியில் வழுவழுப்புத் தன்மையை அதிகரிப்பதற்கும், வலுவிழந்திருக்கும் ரத்தக் குழாய்களுக்கு வலிமையைக் கூட்டவும் அளிக்கப்படும்.

வேறு வழியே இல்லாவிடில், வெளிமூலத்துக்கு லேசர் சிகிச்சை மூலம் அந்த இடத்தைச் சுருக்கிவிடலாம். இது எளிமையானது. ஒரே நாளில் சகஜ நிலைக்குத் திரும்பி வேலைக்குப் போகலாம். ஆனால், செலவு அதிகம். இது முடியாத சூழலில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டி இருக்கும். ஆனால், அறுவைசிகிச்சை செய்துகொண்டாலும்கூட உணவுக் கட்டுப்பாடு முக்கியம்.

 
''வாழ்கையில் பின்பற்றகூடிய இலகுவான யோசனைகள.'' Print E-mail
Sunday, 18 November 2012 17:49

''வாழ்கையில் பின்பற்றகூடிய  இலகுவான யோசனைகளை.''


 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 26 of 44