அன்புக்கு எல்லை ஏது? Print E-mail
Sunday, 11 October 2015 11:35

அறிந்து கொள்வோம்"

அன்புக்கு எல்லை ஏது?

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறை த்துகொண்டேவர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்க ளை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப் போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரே லென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால் கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டுவந்து, குரூப மான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை
அது தெரிந்து கொண்டிருக்கிறது! நமக்கு ஒன்றைப் பார்ப்பதி ல் ஆனந்தம் ஏற்படுவதால் தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத்தை அளிக்கவல்லதில் தலைசிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு ஸமமாக எதுவும் இல் லை. இதனால் ஆனந்தத் தைத் தரும் அன்பே அழகாகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசை யோடு பார்க்கப் பண்ணுகிறது.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்: தொகுத்தவர் -பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உள்ள.......... Print E-mail
Sunday, 11 October 2015 11:36

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உள்ள அம்பிகையின் ஷோடச நாமங்கள்: 16

ஓம் ஸ்ரீ ஸ்வாதீன வல்லபாயை நம: (நல்ல கணவனை அடைய)

ஓம் மகா ஸக்த்யை நம: (மூவகை சக்திகளை அடைய)

ஓம் பக்த சௌபாக்யதாயின்யை நம: (சகல சௌபாக்கியங்களும் பெற)

ஓம் ஸ்ரீ கர்யை நம: (செல்வம் பெற)

ஓம் புருஷார்த்த ப்ரதாயை நம: (அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை அடைய)

ஓம் விக்ன நாசின்யை நம: (எடுத்த காரியம் தடங்கல் இன்றி நிறைவேற)

ஓம் ஸர்வ வியாதி ப்ரசமந்யை நம: (வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்)

ஓம் தயாமூர்த்யை நம: (கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக)

ஓம் ஸாம்ராஜ்ய தாயின்யை நம: (நிலம், வீடு, மனை யோகம் உண்டாக)ஓம் ஸர்வலோக வசங்கர்யை நம: (உயர்ந்த பேச்சாளராகவும், வர்த்தகத்தில் வெற்றி பெறவும்)ஓம் ஸாமரஸ்ய பராயணாயை நம: (குடும்பத்தில் அனைவரிடத்திலும் சுமுகமாக இருக்க)

ஓம் ப்ராணதாத்ர்யை நம: (சுகப்பிரசவம் உண்டாக, மனோவியாதிகள் நீங்க)

ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம: (அறுவகை செல்வங்களை அடைய)

ஓம் நாத ரூபிண்யை நம: (சுவாசம் சம்பந்தமான நோய்கள் நீங்க, இசையில் தேர்ச்சி பெற)

ஓம் சுத்த மானஸாயை நம: (தூய்மையான மனப்பக்குவம் பெற)

ஓம் சிவசக்த்யைக்ய ரூபிண்யை நம: (தம்பதிகளிடையே அந்நியோன்னிய உறவு நிலவ)    MIH சார்பில் தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 
வனவாசம் சென்றிருந்த இராம, லட்சுமணர்கள் தங்கள் .......... Print E-mail
Sunday, 11 October 2015 11:40

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

வனவாசம் சென்றிருந்த இராம, லட்சுமணர்கள் தங்கள் தந்தையின் இறப்பைக் கேட்டு தாங்கள் இருந்த இடத்திலேயே உத்தரக் கிரியைகளை செய்தார்கள்.அச்சந்தர்பத்தில் புண்ணிய நதியை நாடி அவர்கள் நீராடி பின் தந்தையை குறித்து தர்ப்பணம் செய்தார்கள் என்றும் கூறப்படுள்ளது. இறந்தவரைக் குறித்து செய்யும் வழி பாட்டில் புண்ணிய தீர்த்தங்கள் மிகவும் அவசியமானது. தகனம் செய்யும் சாம்பலை புண்ணிய நதியில் இடுவதால் அந்த ஆத்மா ஆனந்தம் அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இதன்படி, பார்த்தால் இறந்த ஆன்மா குறித்து பிண்டம் செய்யும் மரபும் தர்ப்பணம் செய்தல் பற்றியும் இதிகாச காலங்களில் விளக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
-சைவப் புலவர் பால.வசந்தன் குருக்களின் ''இந்து பண்பாட்டு மரபில் பிதிரர் வழிபாடு'' என்ற நூலில் இருந்து.  தொகுத்தவர் : பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 

 
எது உண்மையான பக்தி? Print E-mail
Sunday, 11 October 2015 11:39

இன்றைய சிந்தனை:

'அதைக் கொடு, இதைக் கொடு’ என்று பட்டியல் அடுக்கிவைத்து ஆண்டவனைப் பிரார்த்திப்பது பிசினஸ்! எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத சுத்தமான அன்போடு கடவுளே கதியென்று சரணடைவதுதான் உண்மையான பக்தி!

 
மகாளயம் என்றால் .......... Print E-mail
Sunday, 11 October 2015 11:42

நண்பர்களே, புரட்டாதி மாதம். சனீஸ்வர வழிபாடு., கேதார கெளரி விரதம், முன்னோர் வழிபாடு (மகாளயம்) என்று இந்துகள் சற்று busy ஆக இருக்கும் மாதம்.

மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம். மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

பூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.

மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த புரட்டாதி மாதத்தில் பிதிர் வழிபாடு பற்றி அவ்வப்போது அறிவோம்.--MIH  சார்பில் தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 22 of 45