சாந்தி கர்மாக்களான சஷ்டியப்தபூர்த்தி..... Print E-mail
Sunday, 11 October 2015 11:25

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

சாந்தி கர்மாக்களான சஷ்டியப்தபூர்த்தி, உக்ர ரத சாந்தி, பீம ரத சாந்தி, விஜய ரத சாந்தி போன்ற வைபவங்களின் போதும், மற்றும் சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் ஆகிய மூன்று அபிஷேகங்களின் அங்கமாகவும் ஸ்ரீ ருத்ர ஏகாதஸினி தற்காலத்தில் செய்யப்பட்டு வருகின்றது.

ஸ்ரீ ருத்ர ஏகாதஸினீ என்பது மஹா பிராயஸ்சித்த கர்மாவாகும்.. மிகவும் விசேஷமானது. கர்மாக்களுக்கு அங்கமாக அல்லாமல் தனியாகவும், எப்போது நினைத்தாலும், ஒருவர் செய்து கொள்ளலாம்.
இதுவரை மனதாலும் சரீரத்தாலும் தெரிஞ்சும் தெரியாத வகையிலும் இழைத்த பாபங்களுக்கு இந்த சிவாராதனை மூலம் பிராயஸ்சித்தம் செய்யப்படுகின்றது.
இந்த மகத்தான் சிவாராதனையை பற்றி சற்று சுறுக்கமாக இப்போது இங்கே பார்க்கலாம்.
1. குறைந்தது 11 ருத்விக்குகள் (வைதீகர்கள்) ஸ்ரீ ருத்ர ஜபத்திற்கு தேவை. ஹோம சமயத்தில் 12 பேர் தேவைப்படும்.

2. தம்பதிகளுக்கு விஸ்தாரமான சங்கல்பம் செய்து வைக்கப்படும்.. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அப்யுதயம், புண்யாஹவாசனம், தானாதிகள் முதலியவைகள் உண்டு. 3.. கலச ஸ்தாபணம் : 12 சிறிய கலசங்களும் ஒரு ப்ரதான (பெரிய) கலசமும் தேவைப்படும். கலசங்களில் ஜலத்தை நிரப்பி அலங்காரம் செய்து ஒவ்வொரு கலசத்திலும் ஒவ்வொரு தேவதா மூர்த்தி (பரமேஸ்வரின் அம்ஸம்) ஆவாஹநம் செய்யப்படும்.
ஆவாஹநம் செய்யப்படும் பெயர்கள் இதோ:
சாம்ப-பரமேஸ்வரர், மஹாதேவர், சிவம், ருத்ரம், சங்கரம், நீலலோஹிதம், ஈசாநம், விஜயம், பீமம், தேவதேவம், பவோத்பவம் ஆகிய தேவாதா மூர்த்திகளை 11 கலசங்கள் ஒவ்வொன்றிலும் ஆவாஹநம் செய்வார்கள். பிரதான கலசத்தில் ஆதித்யாத்மக ஸ்ரீ ருத்ரம் ஆவாஹநம் செய்யப்படும். மீதி இருக்கும் ஒரு சிறிய கலசம் புண்யாஹவாசந கலசமாகும்.
4.. மஹந்யாஸத்துடன் கர்மா துவங்கும். மஹந்யாஸத்தில் ஷோடஸாங்க ரெளத்ரீகரணம், ஷடாங்க ந்யாஸம், சிவ சங்கல்பம், ஆத்ம ரக்ஷா, புருஷ சூக்த பாராயணம், தொடர்ந்து அப்ரதிரத: போன்ற சில வேத மந்த்ரங்கள், 8 தடவை அனைவரும் நமஸ்காரம் செய்தல், கலச தேவதைகளுக்கு ஷோடஸ உபசாரங்கள், த்ரிசதி அர்ச்சனை, பதின்மூன்று நமஸ்காரங்கள், அனைவரும் சேர்ந்து த்யான ஸ்லோகம் சொல்லுதல், சமக மந்த்ரங்களுடன் பிரார்த்தனை, புஷ்பாஞ்சலி, ப்ரதக்ஷிண நமஸ்காரம் போன்றவைகள் பல இடம் பெறும்.

4. பிறகு 11 தடவை ஸ்ரீ ருத்ர ஜபம்.
அதே சமயத்தில் ஸ்வாமிக்கு, பஞ்சாயதன மூர்த்திகளுக்கு, 11 த்ரவ்யங்கள் மூலம் வரிசை க்ரமமாக அபிஷேகம் யாராவது ஒருவர் செய்வார்.
5.. தொடர்ந்து 12 ருத்விஜர்களுடன் ருத்ர ஹோமம் - ஹோம இறுதியில் வஸோர்தார ஹோமம். இதில் பூர்ணாஹுதி தனியாக சொல்லப்படவில்லை.
6. கலசங்களை யதாஸ்தானம் செய்து அந்த ஜலத்தை வைதீகாள் மூலம் தம்பதிகளுக்கு அபிஷேகம் செய்வித்தல்.
7. கலசங்களுடன் தக்ஷிணையை சேர்த்து வைதீகாளுக்கு சம்பாவனையாக அளித்து ஆசி பெறுதல். ஹாரத்தியுடன் மங்களகரமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
இப்பேற்பட்ட மகத்தான, சக்தி வாய்ந்த ஸ்ரீ ருத்ர ஏகாதஸநீயில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றவர்கள் பாரம்பரிய உடையில் சென்று பக்தி ச்ரத்தையுடன் பங்குபெற்று எல்லா க்ஷேமங்களையும் அடைய எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை ப்ரார்த்திக்கின்றேன்.

- நன்றி சர்மா சாஸ்திரிகள்.

தொகுத்தவர் : பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா

 
யஜுர் வேதத்தின் தலை சிறந்த............ Print E-mail
Sunday, 11 October 2015 11:28

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

யஜுர் வேதத்தின் தலை சிறந்த பகுதி ஸ்ரீருத்ரம், யஜுர்வேத தைத்திரீய ஸம்ஹிதை காண்டங்கள் ஏழினுள், நான்காவதில், நடுநாயகமாக உள்ளது இது. பாதாதி கேச வர்ணனையில், முக்கால் பகுதியில் ஹ்ருதயம் அமைவது போல, 11 அனுவாகங்களைக் கொண்ட ருத்ர ப்ரச்னத்தில் எட்டாவது அனுவாகத்தில், இருதய ஸ்தானத்தில், இருப்பது சிவ பஞ்சாக்ஷர மந்திரம் மேலும் மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரம் ஸ்ரீருத்ரத்தின் 11-வது அனுவாகத்தில் அமைந்துள்ளது. இக்காரணங்களினால், நித்திய பூஜையிலும், ஜபத்திலும், ஹோமத்திலும் தொன்றுதொட்டு ஆஸ்திகர்களால் ஸ்ரீருத்ரம் கையாளப்பட்டு வருகிறது.

 

MIH-சார்பில் தகவல் திரட்டியவர் :பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா

 
விநாயகர் எளிமையான கடவுள்......... Print E-mail
Sunday, 11 October 2015 11:31

விநாயகர் எளிமையான கடவுள், எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பத்திரங்களாலும் பூக்களாலும் அர்ச்சித்தாலும் ஏற்றுக் கொள்ள கூடியவர். வெல்லம், கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்ற பொருட்களை நிவேதனம் செய்ய மகிழ்வார். அத்தகைய கடவுளுக்கு மனம் குளிர விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறது விநாயக புராணம்

 
நாம் நம் மீதும் பிறர் மீதும் செலுத்தும் ....... Print E-mail
Sunday, 11 October 2015 11:30

இன்றைய சிந்தனை:

நாம் நம் மீதும் பிறர் மீதும் செலுத்தும் வன்முறைக்கு ஆதாரமான காரணம் அன்பு பற்றாக்குறைதான். பிறரைக் குற்றம் சொல்வோர் முதலில் தங்களையே கடிந்துகொள்கின்றனர். குறைபட்ட சுய மதிப்பு உள்ளவர்கள்தான் பிறரின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவந்தனர். உள்ளே அவமானப்படும்போது பிறரை அவமானப்படுத்துவார்கள்.

பிறரை சந்தோஷமாக வைத்திருக்கத் தெரியாதவர் தன்னை முதலில் சந்தோஷமாக வைத்திருக்கத் தெரிந்திருக்க மாட்டார். பிறரின் தன்னம்பிக்கையை நசுக்குபவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகத் தான் இருப்பர்.

 
முன்னோர் வழிபாட்டுக்கு ................ Print E-mail
Sunday, 11 October 2015 11:32

நண்பர்களே, அறிவோம்.

முன்னோர் வழிபாட்டுக்கு உரிய காலம். 'ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம். இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறது. நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.

அவர்களை வழிபட உகந்த காலம் மஹாளயபட்சம்.

நம் தாய் தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப் படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில்; அவர்கள் வாழ்வது பித்ருலோகத்தில்! ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்றும், ஒருவேளை சிறப்பாகத் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.''ஆயு: புத்ரான் யச: ஸ்வர்கம்

கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீஇயம்
பசூன் சுகம் தனம் தான்யம்
ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்''

என்றபடி, நம்மால் இயன்ற அளவு சிறந்த முறையில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், நல்ல குழந்தைகள், புகழ், சொர்க்கம், ஆரோக்கியம், பலம், செல் வம், பசுக்கள், இன்பம், தானியங்கள் போன்ற அனைத்தும் நமக்குக் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை.

-நன்றி: ஆன்மிக மலர் ஒன்றிலிருந்து.: MIH-  சார்பில் தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.

 
<< Start < Prev 21 22 23 24 25 26 27 28 29 30 Next > End >>

Page 21 of 45