விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை........ Print E-mail
Thursday, 25 December 2014 19:17

நண்பர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

''வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காதுபூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமற் சார்வார் தமக்கு''.

தேவர்கள் துயர் துடைக்க நண்பர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

''வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்மாமலராள் நோக்குண்டாம் - மேனிநுடங்காதுபூக்கொண்டு துப்பார்த்துறைமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமற் சார்வார் தமக்கு''.

தேவர்கள் துயர் துடைக்க விநாயகர் கஜமுகன் என்ற அரக்கனை அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார்.இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டுஅவனை அழித்தார் விநாயகர். விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர். நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி, . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும்பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.

-நன்றி, ஆன்மிக மலர் அழித்ததால் அவர் கஜானன கணபதி என்று அழைக்கப்படுகிறார்.இது குறித்த புராணக்கதை கந்தபுராணத்தில் இடம் பெற்றுள்ளது. யானைத்தலையை கொண்ட கஜமுகன் என்ற அரக்கன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானிடம்முறையிட்டனர். சிவபெருமான் விநாயகரை அழைத்து கஜமுகனை அழிக்குமாறு பணித்தார். சிவபெருமான் அளித்த பூதகணங்களுடன் சென்று கஜமுகனுடன் கடும் போரிட்டுஅவனை அழித்தார் விநாயகர். விநாயகர் கஜமுகனை அழித்ததற்கு பிரதிபலனாக சித்தி, புத்தி என்ற தேவ கன்னியரை அவருக்கு மணம் செய்வித்து தேவர்கள் விநாயகரை வணங்கினர். நினைத்த காரியம் நிறைவேறுவதுதான் சித்தி, . புத்தி என்றால் அறிவு. விநாயகரை வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடும். அறிவும், ஞானமும்பெருகும். இதனால் விநாயகருக்கு பாலச்சந்திரன் என்ற பெயரும் உண்டு. புகை வடிவில் தோன்றிய அரக்கனை கொன்றதால் விநாயகருக்கு தூமகேது என்ற பெயர் ஏற்பட்டது.
-நன்றி, ஆன்மிக மலர்

 
தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்? Print E-mail
Thursday, 25 December 2014 19:19

நண்பர்களே ,தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்? அறிந்து கொள்ளுங்கள். எதனையும் காரணத்துடன்தான் இந்து சமயம் வகுத்துள்ளது!

''மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.''
- தகவல் நன்றி, ஆன்மிக மலர்.

 
பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும்......... Print E-mail
Thursday, 25 December 2014 19:22

 

நண்பர்களே, இது ஓர் அருமையான விடயம் அறிந்து கொள்ளுங்கள்!

பிள்ளையாருக்குத் திருமணம் ஆகிவிட்டதாயும் அந்த மனைவியர் பெயர் சித்தி, புத்தி என்றும் சொல்லுவதுண்டு. நமக்கு என்ன தேவை, நல்ல புத்தியும், அதனால் விளையும் சித்தியும். ஆகப் பிள்ளையாரை வணங்கினால் இவை கிடை க்கும் என்பது கண்கூடு.
அந்த மனைவியரின் பிள்ளைகள் சுபன், லாபன் என்ற பெய ரிலும், அவர்களின் சகோதரிக்கு சந்தோஷி என்ற பெயரும் உண்டு. சுபன் என்றாலே நமக்கு சுபத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவன். லாபத்தைத் தரக் கூடியவன். அதனால் விளையும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியவர்.
ஆகப் பிள்ளையார் ஒருத்தரால் நமக்கு சித்தி, புத்தி கிடைப்பதோடு அதனால் விளையும் சுபம், லாபம், சந்தோஷம் ஆகியவையும் கிடைக்கும் என்பது கண் கூடு.

Panchadcharan

 
புராணவரலாறு : Print E-mail
Thursday, 25 December 2014 19:19

புராணவரலாறு :

சுவேத கல்பத்தில், ஒரு சமயம் பார்வதிதேவி நீராடச் செல்லும் வேலையில், தமக்கு ஜெயா, விஜயா என்ற இரு பெண் மெய்க்காவலர்கள் இருந்தபோதும் உண்மையான மெய்க்காவலரின் தேவையினை உணர்ந்தார். எனவே, தமது உடலில் இருந்த அழுக்கினைத் திரட்டி உருவமாகப் படைத்து மெய்க்காவலராக வாயிலில் நியமித்தார். இப்புதிய மெய்க்காவலர் (கணபதி) கண்டிப்பும் பலமும் பெற்றவர். இவருக்கு , நீராடச்
சென்றுள்ள தேவியின் இடத்திற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே, கணபதி யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இவ்வேளையில் சிவபெருமான் பார்வதி தேவியை காண வந்தார். வழியில் நின்றிருந்த கணபதி சிவனை இடைமறித்தார். தாங்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று கூறினார். சிவன் உள்ளே செல்ல முயன்றார். கணபதி சிவனை அறியாதவர். சிவன் கணபதியை
அறியாதவர். ஆகவே, கணபதி மறுக்க, விவாதம் ஏற்பட்டு யுத்தமாக மாறியது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமான் தமது மெய்க்காவலர்களை அழைத்து கணபதியை அப்புறப்படுத்த முனைந்தார். சிவனின் மெய்க்காவலர்கள் விரட்டியடிக்கப் பட்டனர். சிவனுக்காக சுப்பிரமணியரும், விஷ்ணுவும் சென்றனர். கடவுளர்களும், ரிஷிகளும் சென்றனர். அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். சிவபெருமானும் மற்ற
கடவுளர்களும் திகைப்படைந்தனர். என்ன செய்வதென்று அறியாத நிலையில் விஷ்ணு (மாயவன்) தமது மாய வியூகத்தினால் கணபதியை அழிக்க முயன்றார். இதனை அறிந்த பார்வதி தமது பெண் மெய்காவலர்களை யுத்தம் நடைபெறுமிடத்திற்கு அனுப்பினார். அதற்குள் கணபதியின் தலை துண்டிக்கப்பட்டது.இச் செய்தியினை நாரதர் மூலம் அறிந்த பார்வதிதேவி கடுஞ்சினமடைந்தார். கணபதியின் தலையினைத்
துண்டித்தவர்களை அழிக்க ஆயிரம் பெண் தெய்வங்களைப் படைத்தார். இப்பிரபஞ்சம் அதிர்ந்தது கடவுளர்களும், தேவர்களும், ரிஷிகளும் நடுங்கினர். ரிஷிகளும் நாரதரும் தேவியை கைகூப்பி வணங்கி அமைதி காத்தருளுமாறு வேண்டி தாங்கள் தங்களைப் பொருத்தருளுமாறும் வேண்டினர். அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு தேவி, கணபதி மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும்
என்று கூறினார். இதனையறிந்த சிவபெருமான் மற்றுமுள்ள விஷ்ணு, சுப்பிரமணியர் ஆகியோர் ஆலோசித்தனர். இறுதியில் சிவபெருமான் கடவுளர்களை அழைத்து வடக்குத் திசை நோக்கிச் செல்லுங்கள் எதிரில் எந்த உயிரினம் தென்படுகிறதோ அதன் தலையினைக் கொய்து கணபதியின் கழுத்தில் பொறுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறு சென்ற போது யானை தென்பட அதன் தலையை பொறுத்தப்படுகிறது. யானையின் (கஜா)தலையைப் பொறுத்தியிருப்பதால் கஜானனன் என்றழைக்கப்பட்டார். உயிர்த்தெழுந்த கணபதியைக் கண்டு பார்வதிதேவி மனமகிழ்ந்தார். சிவனும் மற்ற கடவுளர்களும் நிம்மதியடைந்தனர். இப் பிரபஞ்சம் பழைய நிலைக்கு வந்தது. சிவனுடைய பூதகணப்படைகளை விரட்டியடித்து பேராற்றல் பெற்ற கணபதியைச் சிவன் அனுக்கிரகம் செய்தார். ஈஸ்வரரின் அனுக்கிரகம் பெற்றதால் விக்கேஸ்வரானுக்கிரகமூர்த்தி

என்று அழைக்கப்பட்டார். அன்று முதல் பூதகணங்களுக்கெல்லாம் தலைவராக சிவாலயங்களில் முதன்மையானவராக முதல் வணக்கத்துக்குரிய கடவுளாக போற்றப்படுகிறார். கணங்களுக்குகெல்லாம் தலைவனானதால் கணபதி என்று போற்றப்பட்டர். சிவபுராணத்தில் இவ்வாறு கணபதியின் தோற்றம் விளக்கப்படுகிறது.

நன்றி.முனைவர் வே. லதா,
உதவிப்பேராசிரியர்,
சிற்பத்துறை
Panchadcharan

 
மணிவாசகர் என்ன கூறுகிறார்? Print E-mail
Thursday, 25 December 2014 19:24

மணிவாசகப் பெருமானோ, பெருமான் எப்பொழுதும் நமக்கு நல்ல துணையாக இருக்கின்றார் என்பதனை, “இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான்” என்று குறிப்பிடுவார். இதனால் நாம் கண் இமைக்கின்ற காலம் கூட நம்மை விட்டுப் பிரியாது நம்மைக் காக்கும் பெருமானே நமக்கு உற்ற நல்ல துணை என்பது தெளிவாகிறது
Panchadcharan

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 28