தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!!
தெய்வ நம்பிக்கையே சக மனிதர்களை நேசிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும்!!!
கடவுள் வழிபாடு வேண்டும். கடவுளில் நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையானது, நமது செயல்பாடுகளுக்கு உந்துதலைக் கொடுத்து முன்னேற வழிவகுக்கும். ஆனால், நாம் முன்னேறுவோமா, மாட்டோமா என்று தெரியாது. ‘முன்னேற வேண்டும்’ எனும் ஆசை வலுத்திருக்கும்.
சாமானிய மனிதர்கள் மீதான நமது நம்பிக்கை உறுதிப்படாது. அவர்களது ஒத்துழைப்பு நமது முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்ற சந்தேகம் என்றைக்கும் நிவர்த்தியாகாது. ஆனால், கடவுளை நம்பலாம். அவருக்கு எதுவும் தேவையில்லை. அவர், நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார். நமக்கு நன்மை செய்யவே காத்திருக்கிறார். அவரிடம் குறையை முறையிட்டால், அதை அகற்றி நமக்கு அருள்செய்வார். இதுபோன்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு. !!!
கடவுள் கண்ணுக்குப் புலப்படமாட்டார். உண்மைதான். கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ விஷயங்களை மனம் ஏற்றுக் கொள்கிறது. மனமும் கண்ணுக்குப் புலப்படாது. உணர்வுகளை வைத்து அப்படி ஒன்று இருப்பதாக ஏற்கிறோம். காற்று கண்ணுக்குப் புலப்படாது. செடி-கொடிகள் அசைவதை வைத்து காற்று இருப்பதை உணர்கிறோம். விதையில் ஒளிந்திருக் கும் மரத்தின் வடிவம் கண்ணுக்குத் தெரியாது.
ஈன்றெடுத்த தாயை, அவள் சொல்லியோ மற்றவர்கள் சொல்லியோ தெரிந்துகொள்கிறோம். இவள் என் தாய் என்று நம்புகிறோம். உண்மையில், அவள்தான் தாய் என்று நம் கண்ணுக்கோ அல்லது அறிவுக்கோ தெரியாது. வயது வந்த பிறகு, சிந்தனை வளம் பெற்ற பிறகு, அவள்தான் தாய் என்ற நம்பிக்கை திடமாகிவிடுகிறது. ‘உனது மனத்தை இயக்கும் ஆன்மா கடவுள்’ என்கிறது சாஸ்திரம். அந்த ஆன்மாவும் நம் கண்ணுக்குப் புலப்படாது. உடல் இயங்குவதை வைத்து அதை உணர்கிறோம். எனவே, கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது.
நம் கண்கள் எல்லாப் பொருட்களையும் அதாவது உருவமுள்ள பொருட்களைப் பார்த்து, அவற்றின் தரத்தைப் புரிந்துகொள்கிறது. ஆனால், கண்ணை அதாவது பார்க்கும் புலனை நம் கண்கள் பார்க்காது. பார்க்கும் புலன் இருக்கிறதா, இல்லையா என்பதை மனம்
விதை முளைத்து வளர்ந்தோங்கிய பிறகே, விதைக்குள் அந்த விருட்சம் கண்ணுக்குப் புலப்படாத வடிவில் இருந்திருக்கிறது என்பதை உணர்கிறோம். அதேபோன்று நெருப்பின் வெப்பமும், நீரின் குளிர்ச்சியும் கண்ணுக்கு இலக்காகாது. உணர்ந்த பிறகே ஏற்கிறோம்!
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களை வாழ்த்தும் கடவுளை புராணம் எடுத்துக்கூறுகிறது. புராணங்களை எழுதிய முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள்; பிறர் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்கள். அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர்கள், துயரத்தில் ஆழ்ந்தவர்களை ஆட்கொண்டு கரையேற்றுபவர்கள். ஆகவே, வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நம்பகமான துணை கடவுள் வழிபாடுதான்.
ஈன்றெடுத்த தாயை, அவள் சொல்லியோ மற்றவர்கள் சொல்லியோ தெரிந்துகொள்கிறோம். இவள் என் தாய் என்று நம்புகிறோம். உண்மையில், அவள்தான் தாய் என்று நம் கண்ணுக்கோ அல்லது அறிவுக்கோ தெரியாது. வயது வந்த பிறகு, சிந்தனை வளம் பெற்ற பிறகு, அவள்தான் தாய் என்ற நம்பிக்கை திடமாகிவிடுகிறது. ‘உனது மனத்தை இயக்கும் ஆன்மா கடவுள்’ என்கிறது சாஸ்திரம். அந்த ஆன்மாவும் நம் கண்ணுக்குப் புலப்படாது.
உடல் இயங்குவதை வைத்து அதை உணர்கிறோம். எனவே, கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. நம் கண்கள் எல்லாப் பொருட்களையும் அதாவது உருவமுள்ள பொருட்களைப் பார்த்து, அவற்றின் தரத்தைப் புரிந்துகொள்கிறது. ஆனால், கண்ணை அதாவது பார்க்கும் புலனை நம் கண்கள் பார்க்காது. பார்க்கும் புலன் இருக்கிறதா, இல்லையா என்பதை மனம் உணர்ந்த பின்னர்தான் ஏற்றுக் கொள்கிறது!!!
கடவுளைப் புரிந்துகொள்வதற்கு வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றை ஆராயவேண்டிய கட்டாயம் இல்லை. நீ இயங்குகிறாய். உன்னை இயக்க ஒருவன் உண்டு. அவன் உன்னுள் உறைந்த ஆன்மா. எங்கும் பரவியிருக்கும் பரம்பொருள், நமது உடலில் ஊடுருவியிருக்கும் வேளையில் ஆன்மா என்ற பெயரில் அறிமுகமாகிறான்.
அந்தக் கடவுளின் துணையில் முன்னேற்றம் அடையலாம். தன்னுள் உறைந்த கடவுளை ஒதுக்கி, மற்ற மனிதர்களின் நட்பைத் தேடி அலைவதில் பயன் இல்லை. அவன் இணைப்பில் வலுப் பெற்ற நம்பிக்கையானது உனது முன்னேற்றத்தை உறுதி செய்யும். கண்ணுக்குப் புலப்படாதவனை வழிபடுவதற்கு ஏற்ப, அவன் உருவத்தை அமைத்து அதில் கடவுளை நினைத்து வழிபடும்போது, உள்ளே இருக்கும் ஆன்மா உன் மனத்தை சரியான வழியில் திருப்பி வெற்றி வாகை சூடவைக்கும்.!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
கடவுள் வழிபாட்டின் முக்கியத்துவமும் அவசியமும்!!!