தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தேர்த்திருவிழா – அறிவோம்!!!
அண்மைக் காலங்களில் பார்த்திருப்பீர்கள், சைவ சமய /இந்து மத விரோதிகள் சிலர் தேர்த் திருவிழாவின் போது அடியார்களின் நேர்த்திக்கடன், தேங்காய் உடைப்பது பற்றி பரிகாசங்கள் செய்வதை அவதானித்து இருப்பீர்கள்! இத்தனை தேங்காய் உடைப்பது ஏன் என்றும் தேர்த்திருவிழா பற்றியும் கேள்விகள் எழுப்பி இருந்தார்கள்.
ஆலயங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கிரியைகள் நம் ஒருவருக்கானவை மட்டுமல்ல. உலக மக்கள் அனைவர்க்குமான பிராத்தனை!!!
நம் வீட்டுக்கு மட்டும் சமைக்கவேண்டும் என்றால், எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அதற்குத் தகுந்தபடி சமைத்தாலே போதுமானது. ஆனால், தாங்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் அனைவருக்கும் சமைக்க வேண்டும் என்றால், வீட்டில் வாங்கி வைத்திருக்கும் மளிகைப் பொருள்கள் போதாது அல்லவா?
அதேபோல்தான் ஆலயங்களில் இறைவனுக்குச் செய்யப்படும் வழிபாடுகள், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உரிய பிரார்த்தனைகளாக அமைகின்றன. ஆலய உற்சவங்களும் விழாக்களும் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், பலரின் வாழ்வாதாரங்களை மறைமுகமாக என்றாலும் உயர்த்தவும் காரணமாகின்றது!!அவர்களிடையே ஒற்றுமையை யும் ஒருமைப்பாட்டையும் வளர்க்கின்றன.
மேலும், தேர்த் திருவிழா போன்ற உற்சவங்கள், பலவிதமான சக்திகளை ஏற்படுத் தும் ஆற்றல் கொண்டவை. `தேர் என்பது நடமாடும் கோயில் ஆகும்’ என்று சிறப்பித்துக் கூறுவர். ஆசார்யரால் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டு, அனைத்து தெய்வங்களின் சக்திகளும் ஆவாஹணம் செய்யப்பட்ட திருத்தேரானது ஊரை வலம் வரும்போது, கோயிலுக்குச் சென்று வழிபட முடியாதவர்களும், தேரில் பவனி வரும் இறைவனை தரிசித்து மகிழ்வுறுவார்கள்.
பலரின் நன்மைகளுக்காகத்தான் இந்த தேர்த்திருவிழா !!! முதலில் இதை பலரும் புரிந்து கொள்ள வேண்டும்!!!
மட்டுமன்றி பறவைகள், விலங்குகள், மரங்கள், செடிகொடிகள் என்று அனைத்துக்கும் நன்மை அளித்து, பஞ்சபூதங்களின் சக்தியை அமைதியுறச் செய்து, இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் தடுத்து மக்களின் வாழ்வை சிறப்பாக்க மிகச் சிறந்த வைபவமாகத் திகழ்வது தேரோட்டம்.!!!
நாமும் நம் தேசத்திலும், உலகத்திலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ, ஊர் கூடி தேர் இழுப்போம். நம்மை இயக்குபவனும் இழுப்பவனும் இறைவன்தானே!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
தேர்த்திருவிழா — ஓர் அலசல்!