ஆலயத்தில் தரப்படும் விபூதியை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்!

பலரை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள், ஆலயத்தில் தரப்படும் விபூதியை எங்கே என்றாலும் வீசி விட்டு செல்வார்கள். அல்லது எங்கும் ஒரு பக்கத்தில் போட்டு விடுவார்கள். இது மிகவும் தவறான செயலாகும்.
ஆலயத்தில் தரப்படும் விபூதியை அணிந்து விட்டு மிகுதி இருந்தால் அவசியம் வீட்டுக்கு கொண்டு வர வேண்டும்!!! கொண்டு வர வேண்டும். ‘சிவன் சொத்து குல நாசம், எனவே சிவாலயத்தில் இருந்து வரும்போது கையில் எதையும் கொண்டு வரக்கூடாது ’என்று சொல்லப்படும் விதி விபூதிக்குப் பொருந்தாது.
அது சிவாலயமாக இருந்தாலும் விநாயகர் ஆலயமாக இருந்தாலும் அம்பாள் ஆலயமாக இருந்தாலும் முருகன் ஆலயமாக இருந்தாலும் , தரபடும் விபூதி கையில் மிகுதி இருந்தால் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் நண்பர்களே!
விபூதி மாத்திரமல்ல, பிரசாதமாக வழங்கப்படுகின்ற பொருட்கள் எல்லாவற்றையும் வீட்டிற்குக் கொண்டு வரலாம். அதிலும் சிவாலயங்களில் தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து குடும்பத்தினர் எல்லோருக்கும் அவசியம் தரவேண்டும். மீதமிருக்கும் விபூதியை வீட்டில் நாம் வைத்திருக்கும் விபூதி பாத்திரத்தில் கலந்துவிட வேண்டும். இறைவனின் அருட்பிரசாதமான விபூதியை வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வருவது சரியே.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture. Org,
www.modernhinduculture.com

 

 

ஆலயத்தில் தரப்படும் விபூதியை வீட்டுக்கு கொண்டு வாருங்கள்!
Scroll to top