ஆமாவாசைக்கும் போதாயான ஆமாவாசைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

நம்மில் பலர் அமாவாசை விரதம், விசேடமாக ஆடி அமாவாசை விரதம் என்று விரதம் அனுஷ்டிப்போம். முன்னோர் வழிபாடு செய்வோம். பஞ்சாங்கத்தில் சிலசமயம் சில விடயங்கள் குறிபிட்டிருப்பார்கள் , அந்த சந்தேகங்களை போக்கவே இதை பதிகிறோம் !
அமாவாசை, போதாயன அமாவாசை , இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
பொதுவாக, அபரான்ன காலம் என்று நிர்ணயிக்கப்படுகின்ற மதியம் 2 மணி சுமாருக்கு என்ன திதி இருக்கின்றதோ, அதுவே அன்றைய சிராத்த திதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒருநாளில் பகல் 2 மணிக்கு மேல் அதாவது, 20 நாழிகைக்கு மேல் அமாவாசை திதிவரும் பட்சத்தில் அந்த நாளை போதாயன அமாவாசை நாள் என்று குறிப்பிடுவர். மாறாக மதியம் 2 மணி வரை அமாவாசை திதி இருந்தால் அந்த நாளை சாதாரணமான அமாவாசை என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
பொதுவாக அமாவாசை தர்ப்பணம் செய்பவர்களும், அமாவாசை நாளில் வீட்டில் முன்னோர்களுக்காக இலைபோட்டு படைப்பவர்களும், அமாவாசை விரதம் இருப்பவர்களும் சாதாரணமாக வருகின்ற அமாவாசை நாளில்தான் செய்ய வேண்டும்.
போதாயன சூத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் போதாயன அமாவாசை என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் செய்ய வேண்டும்.
ஒரு தெளிவு படுத்தல் காரணமான பதிவு இத
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
ModernHinduculture .Org- இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.
 

ஆமாவாசைக்கும் போதாயான ஆமாவாசைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Scroll to top