கரி நாள் என்றால் என்ன?

நல்ல பல விடயங்களை ஆரம்பிக்கும் போது சிலசமயம் இன்றைக்கு நாள் சரியில்லை, கூடாது, கரிநாள் என்று சொல்லி சற்று தள்ளிப் போடுகிறோம். அது என்ன கரிநாள்? ஏன் கரிநாளில் நாம் பெரிதாக நல்ல விடயங்களை முன் எடுப்பதில்லை?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள் என்று கணக்கிட்டு வைத்திருப்பார்கள்.
இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும்.இது போன்ற காரணங்களால் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.
ஒரு நல்ல விடயம் செய்யும் போது ஏன் வீணான வாதப்பிரதி வாதங்கள்? ஒற்றுமையாக நல்ல விடயங்களை முன் எடுக்க வேண்டும் என்று பெரியோர்களினால் சொல்லப் பட்டதனால் சூரியன் ஆதிக்கம் மிகுந்த கரிநாளை தவிர்க்கிறோம்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture . Org
www.modernhinduculture.com
கரி நாள் என்றால் என்ன?
Scroll to top