இன்றைய தமிழ்நாடு முதல் அமைச்சர் உட்பட , இந்து மத ,சைவ சமய எதிரிகள் ,சரியான விளக்கம் இல்லாமல்,பொருள் உணர்ந்து கொள்ளாமல் திருமண மந்திரங்களை அன்று விமர்சித்த காலம் உண்டு. அவர்களே இன்று சைவ மத குருமார்களிடம் ஆசி பெறும் காலம் இன்று!!!
மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்” என்ற மந்திரத்தை புரோஹிதர் மட்டும் சொல்வதை விட மணமகன் சொல்லி திருமாங்கல்யத்தை மணமகளின் கழுத்தினில் கட்டுவதே சாலச்சிறந்தது. இந்த மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக புரோஹிதர் சொல்லித் தர மணமகன் திரும்பச் சொல்லி அதன் பிறகே தாலிகட்டுவது சாலச் சிறந்தது! இதனை சொல்ல மணமகன் தயங்கினால்
புரோகிதர் சொல்ல வேண்டியதுதான்!!!
இதனை மந்திரம் என்று சொல்வதை விட, மணமகன் ஆகிய அந்த ஆண்பிள்ளை மணமகன், தனக்கு வாழ்க்கைத் துணைவியாக வரவிருக்கும் மணமகளைப் பார்த்துச் சொல்லும் உறுதிமொழியுடன் கூடிய ஆசிர்வாதம் என்று இந்த வரிகளைக் கருத வேண்டும்.
மங்களகரமான பெண்ணே, எனது வாழ்வின் நோக்கம் நிறைவேறுவதற்காக (அதாவது தர்மநெறியுடன் கூடிய வாழ்க்கையை நடத்துவதற்காக) திருமாங்கல்யத்துடன் கூடிய இந்த கயிற்றினை உன் கழுத்தினில் கட்டுகிறேன். நீயும் நானும் இணைந்து சரத் ருது என்று சொல்லப்படக்கூடிய கார்காலத்தினை நூறு முறை (சரத: சதம்) சந்திக்க வேண்டும். (அதாவது நூறு ஆண்டுகள் நலமுடன் வாழ வேண்டும்) என்ற உயரிய கருத்தினை ‘மாங்கல்யம் தந்துநானேந’ என்று துவங்குகின்ற மந்திரம் தெளிவாக உணர்த்துகிறது.
Prepared:
Panchadcharan Swaminatha sarma
Modern Hindu Culture E Magazine Editor.
www.modermhinduculture.com
மாங்கல்யம் தந்துநா (அ)னேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி ஸூபகே த்வம் ஜீவ சரத: சதம்”