களத்திர தோஷம் – சுமங்கலி பிரார்த்தனை

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எங்கள் வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகள் என்று தூய்மையான , நேர்மையான வாழ்க்கை முறைகள் முன்னோர்களினால் வகுக்கப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நண்பர்களே , சோதிட அடிப்படையில் பலருக்கு சில பல தோஷங்கள் இருப்பதை நன்கு ஆராய்ந்து படித்த சோதிடர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோம், இப்படியான தோஷங்களில் களத்திர தோஷம் என்பதும் முக்கியமாகிறது.
தோஷங்களில் மிக முக்கியமானது களத்திர தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், காரியங்கள் தடைப்பட்டுக்கொண்டே இருக்கும். முக்கியமாக, திருமணம் என்பது வாழ்வில் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
நல்ல படிப்பு இருக்கலாம். கை நிறைய சம்பாத்தியம் இருக்கலாம். மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். சொந்த வீடு வாகன வசதிகளுடன் இருக்கலாம். ஆனாலும் களத்திர தோஷம் இருந்துவிட்டால், திருமணமானது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் என்பது ஜோதிட விதி.
சரி, அது என்ன களத்திர தோஷம்? அதில் இருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும்???
களத்திர தோஷம் இருந்துவிட்டால், திருமணம் முதலான சுபகாரியங்கள் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கும். களத்திர தோஷம் என்பது முன் ஜென்மத்தால் விளைவது. முன் ஜென்ம வினைகளால் நிகழ்வது. முன் ஜென்மத்தின் பாவ புண்ணிய கணக்குகளின்படியே களத்திர தோஷமானது நிகழ்கிறது.
களத்திர தோஷம் உள்ளவர்கள், ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நன்னாளில், வீட்டில் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். வீட்டில் விளக்கேற்றுங்கள். ஐந்து அல்லது ஏழு சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு பாதபூஜைகள் செய்யலாம். பூஜையில் மங்கலப் பொருட்களை வைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்.
திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளில் சுமங்கலி பூஜை செய்யப் படுகின்றன , நம் முன்னால் வாழும் சுமங்கலிகள், சுமங்கலிக்களாக நம்மை விட்டு பிரிந்தவர்கள் எல்லோரையும் வணங்கி பிரார்த்தனை செய்கிறோம்.
நாம் அழைத்து வந்திருக்கும் சுமங்கலிகளுக்கும் கன்யா குழந்தைகளுக்கும் உணவு வழங்கலாம். உணவு முடிந்ததும், அவர்களுக்கு பூ, வெற்றிலை, பழங்கள், புடவை, மஞ்சள், கண்ணாடி வளையல், மஞ்சள் சரடு, குங்குமம் முதலான மங்கலப் பொருட்களை வழங்கி நமஸ்கரித்து வேண்டிக்கொள்ளலாம்.
இதனால், நம் வம்சத்தில் மறைந்துவிட்ட, , மற்றும் எம் முன்னால் வாழ்ந்து கொண்டிருக்கிற சுமங்கலிகள் அகம் குளிர்ந்து போகிறார்கள் என்றும் அவர்களின் பரிபூரண ஆசீர்வாதமானது நம் வீட்டு ,பெண்களுக்கு ,குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்றும் அந்த மறைந்த சுமங்கலிகளின் ஆசியும் வந்த சுமங்கலிகளின் ஆசியும் கிடைக்க, களத்திர தோஷம் நீங்கும் என்றும் விவரிக்கிறது சாஸ்திரம்.
ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தாலும்,இல்லாவிட்டாலும், சுமங்கலி பூஜையும் பிரார்த்தனையும் நிச்சயம் பலன்களைத் தந்தருளும். அதேபோல், வருடத்துக்கு ஒருமுறையேனும் எவர் வேண்டுமானாலும் இல்லத்தில் சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது, வம்சத்தை சீரும் சிறப்புமாக வாழச் செய்யும் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
prepared by: panchadcharan swaminathasarma
களத்திர தோஷம் – சுமங்கலி பிரார்த்தனை
Scroll to top