அர்ச்சனை வழிபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நண்பர்களே , நாம் ஆலயத்துக்கு செல்கிறோம். அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறோம். பக்தர்கள் சிலர் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வார்கள்,வேறு சிலர் சாமி பெயரில் செய்யுமாறு சொல்வார்கள்!
இரண்டுமே சிறந்ததுதான். இரண்டும் ஒரே பலனைத் தரும். வேரில் நீர் விடும்போது, அது அந்த மரத்தில் இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சரியான அளவில் சென்றடையும். அந்த மரத்தில் நமக்கு வேண்டிய பழம் இருக்கும். நாம் வேரிடம் `இன்ன பழத்துக்காக நான் நீர் விடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு நீரூற்றினாலும், நாம் விடும் நீரானது பழத்துக்கு மட்டுமன்றி, அந்த மரத்தின் அனைத்துப் பாகங்களையும் சென்றடையும்.
அதுபோன்றுதான் நமது பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தாலும், கடவுளின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தாலும் நாம் அடையக்கூடிய பலன் ஒன்றே.
சிலருக்குக் கடவுளின் எதிரில் அவர் குடும்பத்தாரின் பெயர், நக்ஷத்திரங்களைக் கூறும்போது, தைரியமும் நம்பிக்கையும் ஏற்படும். சிலசிறப்புப் பூஜைகள் குறிப்பிட்ட காரணத்துக்காகச் செய்யப்படும். அப்போது நம் பெயரைச் சொல்லித்தான் செய்யவேண்டும். அந்த மந்திரமானது பெயருடன் தொடர்பு ஏற்படுத்தி, நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். மற்றபடி, பொதுவாக வழிபாடுகள் செய்யும் போது இரண்டு முறைகளும் நன்மை அளிப்பவையே.
நன்றி: ஷண்முக சிவாச்சாரியார்.
No photo description available.
அர்ச்சனை வழிபாடுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
Scroll to top