-
தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஒளபாஸனம் :-
ஒளபாஸனத்தையும் அக்னிஹோத்ரத்தையும் நாம் குழப்பிக்கக் கூடாது. ஏனெனில் என்னை விளக்கம் கேட்ட சிலரிடம் இந்த குழப்பத்தை கண்டேன். இவை இரண்டும் ஒன்றல்ல.
ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம்.
ஒளபாஸனம் என்பது கிருஹஸ்தர்கள் அனைவரும் கல்யாணமான நாளிலிருந்து தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் அனுஷ்டிக்க வேண்டிய கர்மாவாகும். இதற்காக ‘ஸ்பெஷலாக’ எந்த முன் யோக்யதையும் விசேஷமாகச் சொல்லப்படவில்லை. விவாஹ சம்ஸ்காரம் யதோக்தமாக நடந்திருக்கவேண்டும். கல்யாணம் ஆனவுடன் ’ஆட்டொமேடிக்காக’ யோக்யதை வந்துவிடுகின்றது.
ப்ரஹ்மச்சாரியாக இருந்தபோது சமிதாதானம் எனும் அக்னி உபாஸனை செய்ய வேண்டும் என்பது நாம் அறிந்ததே.
காஞ்சி ஆச்சார்யாள் ஒரு சந்தர்பத்தில் ஒளபாஸனத்தை பற்றி அருளுரை வழங்கியபோது சொன்னதை கேளுங்கள்: “…இப்படி அவிச்சின்னமாக (முறிவு படாமல்) தலைமுறை தலைமுறையாக அதே அக்னி போகும். ஒரு தனி மனிதனையும், அவனுடைய ஒரு குடும்பத்தையும் மட்டுமே மையமாகக் கொண்டு அமைகிற – அதாவது ஒளபாஸன அக்னி உபயோகிக்கப்படுகிற எல்லா கர்மங்களுக்கும் பலன் நேராக ஒரு குடும்பத்தை உத்தேசித்ததானாலும், அதில் பிரயோகமாகிற வேத மந்திர சப்தம் சகல ஜகத்துக்கும் நல்லது செய்யத்தான் செய்யும்…”
ஏற்கனவே மேலே குறிப்பிட்டப்படி கல்யாணத்தில் ஒளபாஸனம் செய்யும் அதிகாரம் நமக்கு வந்துவிடுகின்றது. ஒளபாஸனத்திற்கான அக்னியை கல்யாணத்தில் (மந்திர பூர்வமாக ஏற்படுத்திய ஒளபாஸன அக்னி) எப்போதும் அனையாமல் குண்டானில் வைத்துக் காப்பாற்றுவார். ஆம், ஒவ்வொரு வேலைக்கும் புது புது அக்னி தயார் செய்யக்கூடாது, அதே அக்னியை அணையாமல் தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டும்.
ஒளபாஸனம் செய்வது சுலபம். மந்திரங்களும் மிக குறைவு. பத்து நிமிஷங்கள் இருந்தால் போதும் ஒளபாஸனம் செய்து விடலாம். அக்னியை தொடர்ந்து காப்பாற்றுவதில் ஆரம்பத்தில் சிறிது ச்ரமம் இருக்கும். ஆனால் போகப் போக அதுவும் சுலபமாகிவிடும்.
இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் தான் இல்லாதபோது (முடியாதபோது) மனைவி, புத்திரன், சிஷ்யன், மாப்பிள்ளை, சகோதரன், தன்னால் வரிக்கப்பட்ட ருத்விக் இவர்களில் யாரையாவது ஒருவரை வைத்துக்கொண்டு தனது ஒளபாஸனத்தை செய்து கொள்ளலாம்.
மேலும் பும்ஸ்வனம், சீமந்தம், ச்ராத்தம், கூஷ்மாண்ட ஹோமம் போன்ற பல வைதீக கார்யங்களை ஒளபாஸன அக்னியில்தான் செய்யச் சொல்லியிருக்கின்றது. அதாவது ஒளபாஸனம் காலையில் செய்தவுடன் தொடர்ந்து அந்த அக்னியில்தான் மேலே குறிப்பிட்ட கர்மாக்களை கர்த்தா செய்யவேண்டும். வேறே தனி அக்னியில் செய்யக்கூடாது.
ஆனால் சமிதாதானம் பிரஹ்மச்சாரி தனக்காக, தான் மட்டுமே செய்ய இயலும். அதாகப்பட்டது அவனது சமிதாதானத்தை பிறர் யாரும் செய்ய முடியாது.
சில நாட்கள் விட்டுபோனால் என்ன செய்வது?
இந்த சந்தேகம் வருவது நியாயம்தான். பிரச்னை இல்லை. அதற்கு வழி இருக்கு. சில நாட்களோ, அல்லது பல நாட்களோ விட்டு போன ஒளபாஸனத்தை ‘அக்னி சந்தானம்’ எனும் பிரயோகத்துடன்கூட சில ப்ராயஸ்சித்தத்துடன் செய்வதன் மூலம் மீண்டும் கிருஹஸ்தன் தனது ஒளபாஸனத்தை நித்யப்படி ஆரம்பிக்கலாம்.மேலும் ஒரு விஷயம். மனைவி இறந்து விட்டால் அந்த கிருஹஸ்தனுக்கு ஒளபாஸனம் செய்யும் யோக்யதை அறவே போய் விடுகின்றது. மனைவி இல்லையென்றால் அவனால் பிறகு ஒளபாஸனம் வாழ்நாள் முழுவதும் செய்ய இயலாது.
நன்றி -சர்மா சாஸ்திரிகள்
ஒளபாஸனத்தை பற்றி இப்போ இங்கே பார்ப்போம்.