தர்ப்பைப் பாய்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள் சொல்கிறார்:-

தரையில் துணி விரித்து அதன் மீது அமர்ந்து தியானம் செய்யலாமா? அல்லது தர்ப்பைப் பாயைப் பயன்படுத்த வேண்டுமா?
தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்). அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்… தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ ஆஸன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது. புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழியில்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக் கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவி ஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும். துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.

தர்ப்பைப் பாய்
Scroll to top