மகோற்சவம்:–

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

மகோற்சவம்:–

மகோற்சவம் என்பது பல தத்துவமான கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதாயுள்ளது. நல்லஞானத்தையும் போக மோட்சத்தையும் ஆன்மாக்களுக்குத் அளிப்பது மகோற்சவம் ஆகும். உற்சவ ஆரம்பம் கொடியேற்றம் வரையான கிரியைகள் படைத்தலையும், வாகனத்திருவிழா காத்தலையும் இரதோற்சவம் அழித்தலையும், மௌன உற்சவம் மறைத்தலையும், தீர்த்தஉற்றசவம் அருளலையும் குறிப்பதாக நடாத்தப்படுகின்றது.

இப்படியான ஆலய உற்சவங்களில் பங்குபற்றுபவர்கள், வழிபடுபவர்களுக்கும் தீட்சை பெறா விட்டாலும் தீட்சை பெற்ற பலன் கிட்டியதாக ஆகமங்கள் உணர்த்துகின்றன. ஆலயங்களில் நடைபெறும் நித்திய பூசையில் உண்டாகும் குற்றங்களையும் நைமித்திய பூசைகள் நீக்குவனவாக உள்ளன. நைமித்திய உற்சவங்களில் சிறந்தது கொடியேற்றம் ஆகும். கொடிமரத்தின் மேல் மூன்று குறுக்குத்தண்டுகள் இச்சாசக்தியாகவும், கிரியாசக்தியாகவும், ஞானாசக்தியாகவும், இரண்டு குறுக்குத்தண்டுகள் சூரியனையும், சந்திரனையும் கொடியேற்றும் கயிறு அனுக்கிரக சக்தியாகவும், கொடி வாயுவாகவும், கொடியிலுள்ள மையப்படம் அவ்வக்கோயில் மூலமூர்த்திகளின் சக்தியையும் குறிக்கும்,

சைவாகமங்களில்- மூன்று பொருட்களான பதி,பசு,பாசம் என்பவற்றில் பசு எவ்வாறு பாசத்தினின்று விலகி இறைவனைப் பற்றிக் கொள்வது என்பதையும் விளக்கி நிற்கின்றது. கொடிமரம் பதியையும், கொடிச்சீலை பசுவையும் தர்பைக் கயிறு பாசத்தையும் குறிக்கின்றது. கொடிக்கம்பத்தில் காணப்படும் முப்பத்திமூன்று கணுக்கள் மானுட சரீரத்திலேயுள்ள முள்ளந்தண்டில் முப்பத்திமூன்று எலும்புக்கோர்வைகளை குறிக்கின்றது.

மகோற்சவம்:–
Scroll to top