தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
விசேட தினங்களில் எங்கள் இணையதளத்தில் நன்மை பயக்கும் பல விடயங்கள் பதிவுகள் வந்த படி இருக்கும்.
அந்த அடிப்படையில் ஆன்மிக இதழ் ஒன்றில் இருந்த விடயத்தை இங்கு தருகிறோம்.
அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயர் அம்மனுக்கு கொடுத்து சிறப்பிக்கிறது .
சுவாஷினி என்றால் மங்களம் நிறைந்தவள் என்று பொருள் .சுவாஷினி தான் சுமங்கலி என்று காலப்போக்கில் மாறியது என்று சொல்வார்கள்.
கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடக்கின்ற பெண்களே சுமங்கலி என அழைக்கப்படுவாள் .
நல்ல இல்லம் நடத்துகின்ற பெண்ணை இந்து மதம் பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறது .அந்த பெண்களை வழிபடுவது பராசக்தியையே வழிபடுவதாகும் .
சுமங்கலி பூஜை நவராத்திரி தினத்தில் நடைபெறுவது சிறப்பானது .ஒரு வீட்டில் நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் கன்னி பெண் இருந்தால் அந்த பெண்ணின் தோஷத்தை நீக்க பூஜை நடத்தலாம் .
சுமங்கலி பூஜை எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை .