தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இது ஒரு மருத்துவக் குறிப்பு:-
இந்தியில் ‘ராஜ்மா’ என்று அழைப்பதையே, இப்போது நாமும் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் ரெட் கிட்னி பீன்ஸ். தெலுங்கில், ‘பாரிகலு’ என்றும் கன்னடத்தில் ‘திங்கல நாரி’ என்று சொன்னாலும், தமிழில் ‘சிவப்பு பீன்ஸ்’ என்றால்தான் பலருக்கும் புரியும்.
இதில் சோடியமும் பொட்டாசியமும் அறவே இல்லை என்பதுகவனிக்கத்தக்கது. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.இதில் உள்ள புரதத்தில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் உள்ளன.அதனால் முழுப் புரதம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடிஉபயோகிக்கலாம்.
ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை அடிக்கடிஉபயோகிக்கலாம்.உலர்ந்த சுண்டல் வகைகளைப் போலவே, இதில் உள்ள நார்ச்சத்து பலவிதமாகவும் நமக்கு நன்மை புரியும். மலச்சிக்கலைத் தடுக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும். நீரிழிவு உள்ளவர்கள், இதயநோய் உள்ளவர்கள் என்று எல்லோரும் இதை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக அரிந்த எலுமிச்சைப் பழத்தை மேலே பிழிந்து சாப்பிட்டால் அதிக ருசியாக இருக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து உறிஞ்சப்படவும் உதவும். இந்த கிரேவியை சாதத்துடன் சாப்பிடுபவர்களும் உண்டு.