தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
நண்பர்களே, யாரைப் பார்த்தாலும் எதோ ஒரு பிரச்சினை பற்றி சந்திக்கும்போது பேசிக் கொள்வார்கள். பிரச்சினை இல்லாத மனிதர்கள் யார் இருக்கிறார்கள்?
சீடன் ஒருவன் தன் குருவை அணுகி, ‘‘தங்கள் அருளால் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்றிருப்பினும், ஒன்று மட்டும் எனக்குப் புரிபடவே இல்லை. அதாவது, வாழ்க்கையில் பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன; அலைகழிக்கின்றன. அவற்றிலிருந்து மீள வழி தெரியவில்லை’’ என்றான். இதைக் கேட்ட குரு, “நாம் பிறக்கும் போதே பிரச்னைகளும் நம்முடன் பிறந்து விடுகின்றன. சிறு வயதில் உனது பிரச்னையைப் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள். ,
பருவ வயதில், பிரச்னைகளை நாமே எதிர் கொண்டு வெல்வோம். ஆனால், ஒரு பிரச்னையின் முடிவு மற்றொரு பிரச்னையின் துவக்கம்! பிரச்னைகளைக் களைய களைய ஒன்றன் பின் ஒன்றாய்… புதிது புதிதாக பிரச்னைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஒருவன் இறக்கும் வரை பிரச்னைகளும் இருக்கும்! அவற்றிலிருந்து விடுபட இரண்டு வழிகள் உண்டு.,
பிரச்னைகளை லேசாக எடுத்துக் கொண்டு அவற்றை அலட்சியப்படுத்துவது முதல் வழி. அடுத்து… பிரச்னையைத் தலைதூக்க விடாமல் அழித்துவிட வேண்டும். இதற்கு உறுதியான மனம் அவசியம். தர்மசாஸ்திரத்தை நடைமுறைப் படுத்தினால், மனம் உறுதி பெறும்.
இன்னொரு விஷயம்… கடமையை எப்படி நிறைவேற்றலாம் என்பது குறித்துக் கவலைப்படலாம். ஆனால், அதன் பலன் குறித்துக் கவலைப்படக் கூடாது. பலனை எதிர்பார்த்தால், பிரச்னைகளைச் சந்திக்கும் வலு இருக் காது; துயரத்தில் துவண்டு விடுவோம். எனவே, எது வந்தாலும் ஏற்றுக்கொள்!’’ என்று அறிவுரை கூறினார். இது உங்கள் அன்னைக்கும் பொருந்தும்!
இறை வழிபாடும் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுவிக்கும் நண்பர்களே!