ஏகாதசி விரத மகிமைகளை தெரிந்து கொள்வோம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

ஏகாதசி விரத மகிமைகளை தெரிந்து கொள்வோம்.

ஹரி ஹரன் இருவருமே வேறு வேறு சக்திகள் அல்ல, ஒன்று என்பதற்கான விஷயங்கள் நிறைய உள்ளன. துர்புத்தி படைத்த சூரனை அடக்கி, தேவர்கள் துயர் நீக்க சிவனனின் அம்சமாக கந்தன் தோன்றியது போல, மூவுலகையும் துன்புறுத்தி வந்த முரனை அடக்குவதற்காக, விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. முரனின் கொடுமையிலிருந்து தப்பிய நாளே ஏகாதசி என்பதால், ஏகாதசி ஒரு முக்கிய விரதமாக வைணவ தலங்களில் கொண்டாடப்படுகிறது. அது மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியாக இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. பயன்களின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் வகையில் ஒரு பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை பின்பற்றுவதால் வரக்கூடியப் பலன்களைப் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளலாம். இந்த விபரங்களை எங்கள் மறு பதிவில் பாருங்கள் நண்பர்களே!

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
ஏகாதசி விரத மகிமைகளை தெரிந்து கொள்வோம்.
Scroll to top