ஐயப்ப அவதார ரகசியம்.

Image may contain: 1 person
Moderninternational Hinduculture

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

அவதார ரகசியம்!

மகாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவவிஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்ப வாசம் புரியாமல் சங்கல்ப மாத்தரத்தில் அவதரித்தவர் ஸ்ரீமகாசாஸ்தா. கயிலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் தேவியரை மணந்து அருளாட்சி நடத்திவந்த ஸ்ரீமகாசாஸ்தா, மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, பூவுலகில் மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்தார்.

ஆகாய கங்கை வழியாக பம்பையாற்றங்கரை அடைந்து, அங்கே ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமேஸ்வரன் கொடுத்த நவரத்தின மாலையை கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால், ஸ்ரீமணிகண்டன் என்று அவருக்குத் திருப்பெயர் வாய்த்தது.

இந்த இடத்தில் ஓர் உண்மையை நாம் அறிவது அவசியம். மணி என்றால்… பெரும்பாலும் எல்லோரும் கருதுவது போல் கோயில் மணி அல்ல. பொதுவாக `மணி’ என்றால், நவரத்தின மணி என்றே பொருள்.கழுத்தில் நவரத்தினங்கள் ஜொலித்த காரணத்தால், அவருக்கு `மணிகண்டன்’ என்று திருப்பெயரிட்டு வளர்த்து வந்தான், ராஜசேகர பாண்டியன்.

அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சார்யாகவே வாழ்ந்த மணிகண்டன், மஹிஷியை சம்ஹாரம் செய்தபிறகு, கலியுக வரதனாக கோயில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான ஸ்ரீமணிகண்டனை, மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரி பர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன், வருடத்தில் ஒருநாள் – மகர ஸங்க்ரமத்தன்று கண் விழித்து பக்தர்களை அனுக்ரஹிப்பேன் என்று வாக்களித்தார். பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரி மலைக்கான விரத வழிமுறைகளை வகுத்தளித்தார். ஒரு மண்டல காலம் பிரமாச்சார்யாதி விரதங்களை மேற்கொள்ளும் அன்பர்களே சபரிமலைக்குச் செல்ல தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார் அவர். சபரி மலைக் கோயிலின் ஸ்தல புராணம் இதுவே.

பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரள கல்பப் பகுதியில், நமக்குக் கிட்டும் புராண சரிதம் இது.

தகவல் தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

ஐயப்ப அவதார ரகசியம்.
Scroll to top