தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
தீபங்கள் ஏற்ற உகந்த எண்ணெய் மற்றும் அதன் பலன்களை இன்று அறிவோம்!
நல்லெண்ணெய் அல்லது தூய பசுவிலிருந்து தருவிக்கப்பட்ட நெய் ஆகிய இரண்டுமே கோயில்களிலும் வீட்டுப் பூஜை அறைகளிலும் தீபம் ஏற்றுவதற்கு உகந்தவையாகக் கூறப்பட்டுள்ளன.
`திலாஃபாபஹரா:’ என்றோரு வாக்கியம் உண்டு. எள் நம் பாபங்களை அகற்றும். `ஆயுர் வை க்ருதம்’ – நல்ல நெய், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வழிவகுக்கும்.
தீபம் ஏற்றுவது, புற இருளை நீக்கி வெளிச்சம் ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. அதற்கு மின்சார விளக்குகளே போதுமானவை. நாம் ஏற்றும் தீபம் நமது அக இருளையும் அழிக்கவல்லது. சாஸ்திரங்களில் கூறப்பட்ட திரவியங்கள் தீப ஒளியுடன் கலந்து, ஒருவித அதிர்வுகளை ஏற்படுத்தி, நமது மனதையும் அங்கு இருக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலையும் நல்ல நிலையில் அமைக்கக்கூடிய ஆற்றல்கொண்டவை.
க்ருத தீபே தக்ஷிணே ஸ்யாத் தைல தீபஸ்து வாமத:’ என்ற வாக்கியத்தின் மூலம், வலது பாகத்தில் நெய் தீபத்தையும் இடது பக்கத்தில் நல்லெண்ணெய் தீபத்தையும் வைத்து வழிபாடுகள் நடத்தவேண்டும் என்று சாக்த தந்திரங்கள் கட்டளையிடுகின்றன.
குறிப்பிட்ட பரிகாரங்களுக்காகக் குறிப்பிட்ட எண்ணெய் பரிந்துரைக்கப்பட்டால், அந்த நேரத்தில் மட்டும் அவற்றைப் பயன்படுத்தலாம்.
நன்றி : ஷண்முக சிவாச்சாரியார்.
தகவல் சேகரிப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.