தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
எண்ணங்கள் அழிவதில்லை. அவை அடிமனதில் எப்போதும் தங்கியிருக்கும். அவற்றின் எச்சங்களாக சொல்லோ செயலோ வந்து விழுந்துவிடுகின்றன. ஆகவேதான் எண்ணங்களில் கவனம் வேண்டும் என்றார்கள் பெரியோர்கள். விழுந்த சொல்லும் செய்த செயலும் கர்மங்களாகிவிடுகின்றன. கர்மத்தின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.
பொய் மானை பொன் மான் என்று சீதை நம்பியதும் அவள் கேட்டுக் கொண்டதால் ராமன் அந்த மானை விரட்டிச்சென்றதும் கர்மாவின் விளைவுகளேயன்றி வேறென்ன! கடவுளே மனிதனாக அவதரித்து வந்தாலும் கர்மாவின்படியே அனைத்தும் நடக்கும். ஜன்மங்கள் கடந்தும் துரத்த வல்லவை கர்மப்பலன்கள். அவற்றால் உண்டாகும் துன்பங்களைக் களைய ஆலய வழிபாடு ஒன்றே தீர்வாகும்.
தகவல்: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
தெரிந்து கொள்வோம் நண்பர்களே: