இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். இந்தத் தளத்திலே இந்து சமயம் குறித்த தொன்மையான வரலாறு, அதன் அடிப்படை தத்துவம், ஆகம விளக்கங்கள், மற்றும் திருமண வாழ்த்து, நினைவஞ்சலிகள் போன்றவற்றை இங்கே காணலாம்.
இவ்வமைப்பானது 1965ம் ஆண்டு இலங்கையிலுள்ள சுண்ணாகம் எனும் நகரில் டாக்டர். நா. சோமாஸ்கந்தக் குருக்கள் மற்றும் டாக்டர். நா. சர்வேஸ்வரக் குருக்கள் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது (பதிவு இல: GA 2352). இவ்வமைப்பு தற்பொழுது உலகளாவிய ரீதியில் பல அந்தணர்களை உறுப்பினர்களாகக்கொண்டு ஆன்மீக, சமய, கலை, மருத்துவ மேம்பாட்டிற்காக பாடுபட்டுவருகிறது.